உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயிர் சேதத்துக்கு ஒரு ரூபாய் இழப்பீடு காப்பீடு நிறுவனங்களின் அலட்சியம்; விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அமைச்சர்

பயிர் சேதத்துக்கு ஒரு ரூபாய் இழப்பீடு காப்பீடு நிறுவனங்களின் அலட்சியம்; விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சாராம்சம்: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் அமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்தில், காப்பீடு நிறுவனங்கள் சிலரது பயிர் பாதிப்புக்கு ஒரு ரூபாய் முதல் 21 ரூபாய் வரை மட்டும் இழப்பீடு வழங்கியதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது விவசாயிகளை கிண்டல் செய்யும் செயல் என அதிருப்தி தெரிவித்த அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.புதுடில்லி: பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஒரே ஒரு ரூபாயை கொடுத்த காப்பீடு நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.குறைந்த செலவில் விவசாய பயிர்களுக்கு காப்பீடு வசதி அளிப்பதற்காக 2016ம் ஆண்டின் காரிப் பருவத்தின்போது பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விதைப்புக்கு முன்பு தொடங்கி அறுவடைக்கு பிந்தைய காலம்வரை இயற்கை சீற்றங்களால் பயிர் சேதம் ஏற்பட்டால், இத்திட்டத்தில் இழப்பீடு பெறலாம்.இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகாராஷ்டிர விவசாயிகளிடம் ஆன்லைன் வழியாக அவர் கலந்துரையாடினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு ரூபாய், மூன்று ரூபாய், 21 ரூபாய் என்று பயிர் சேதத்துக்கு இழப்பீடு வழங்கியிருப்பதாக விவசாயிகள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இது, விவசாயிகளைக் கிண்டல் செய்வதுபோல் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்க ஒருபோதும் மத்திய அரசு அனுமதிக்காது. இவ்வாறு செய்த காப்பீடு நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rahim
நவ 05, 2025 10:25

இதுவே இந்நேரம் தமிழ்நாட்டு செய்தி என்றால் வாஷிங்மேஷின் கட்சியின் ஆதரவாளர்களும் சாட்டையடி வீரர்களும் பக்கம் பக்கமாக வசனம் பேசி எழுதியும் பேசியும் இருப்பார்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 05, 2025 09:41

வர வர ஆஸ்பத்திரிகளில் இன்சூரன்ஸ்காரர்களின் அடாவடித்தனம் தாங்க முடியவில்லை


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 05, 2025 09:23

நம் நாட்டில் இன்சூரன்ஸ் என்பதே கேலிக்கூத்தாகத்தான் இருக்கிறது. என்னுடைய ஸ்கூட்டர் விபத்தில் சிக்கியபோது இன்சூரன்ஸ் சர்வேயர் ஆய்வு செய்து 18000 ரூபாய் அனுமதித்தார். நாமும் 23000 செலவு செய்து வண்டியை எடுத்துவந்தேன். ஆறுமாதம் சென்று பல நினைவூட்டல்களுக்குப்பின் எனக்கு கிடைத்தது 4600 மட்டுமே.


சாமானியன்
நவ 05, 2025 09:11

காப்பீடு நிறுவனங்களின் ஏஜெண்ட் கமிஷனை 1% ஆக ஆக்கவும். ரொம்ப கொள்ளை அடிக்கரானுங்க.


முதல் தமிழன்
நவ 05, 2025 09:11

எதுக்கும் பிரதமர் மற்றும் நிதி மந்திரியிடம் அனுமதி வாங்கி விசாரணை செய்வது முக்கியம். யார் கண்டா அம்பானி இல்லை அதானி கம்பெனியா என்று.


சுந்தர்
நவ 05, 2025 09:10

அவற்றை தடை செய்யவும். அப்போதுதான் மற்றவர்கள் தவறு செய்ய மாட்டார்கள்.


R.RAMACHANDRAN
நவ 05, 2025 09:09

எல்லா திட்டங்களின் பலனும் தகுதியற்றவர்களுக்கே அளிக்கப்படுகின்றன இந்நாட்டில். பயிர் காப்பீடு திட்டமும் காப்பீட்டு நிறுவனங்கள் பயனடையவே என்ற நிலையில் இப்போதுதான் அது அமைச்சருக்கு தெரிய வந்துள்ளது.இது நாள் வரை ஊழல் மிக்க அதிகார வர்க்கத்தால் மறைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு.


அப்பாவி
நவ 05, 2025 08:46

பின்னே எவ்ளோ குடுப்பாய்ங்க? ப்ரதான் மந்திரீக்கி கிசான் சம்மான்னு நீட்டி முழக்கினா மட்டும் போதுமா? பிரிமியத்தை யெல்லாம் இன்சூரன்ஸ்காரனே சாப்புட்டிருப்பான். தேர்தல் நிதி குடுத்திருப்பான்.


ASIATIC RAMESH
நவ 05, 2025 08:18

அந்த காப்பீட்டு நிறுவனங்களின் வரவு செலவு நிதிகளை ஆராய்ந்து சரிபார்க்கவும். விஞ்ஞான ஊழல்கள் பெருத்துவிட்ட இந்த நாட்டில் இடைத்தரகர்கள், அலுவலர்கள் அரசியல் வியாதிகள் சேர்ந்து மடை மாற்றியிருக்கலாம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை