உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் ரூ.1.4 லட்சம் கோடி சேமிப்பு: மத்திய அமைச்சர் பெருமிதம்

பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் ரூ.1.4 லட்சம் கோடி சேமிப்பு: மத்திய அமைச்சர் பெருமிதம்

லக்னோ: 'பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 1.4 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது,'' என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: உலகளாவிய நிலைமையைப் பாருங்கள், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைந்துள்ளன, அவை அதிகரிக்கவில்லை. எத்தனால் தயாரிக்கும் பணியில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. நேற்று அசாமில், பிரதமர் மோடி மூங்கிலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் ஆலையைத் திறந்து வைத்தார். உத்தரப் பிரதேசம் எரிசக்தித் துறையிலும் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது.

1.4 லட்சம் கோடி

பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இப்படி கலப்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 1.4 லட்சம் கோடி ரூபாய் சேமித்துள்ளோம். 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் பெட்ரோலில் 10% எத்தனை நாள் கலக்கும் இலக்கை அடைவோம் என்று மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இந்த இலக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு அடையப்பட்டது.

5 ஆண்டுகள்

2030ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கு எங்களுக்கு இருந்தது. ஐந்து ஆண்டுக்கு முன் நாங்கள் அதைச் செய்தோம். எந்த சர்ச்சையும் இல்லை. இதை மேலும் தொடருவோம் என்று சில அறிக்கைகள் வெளியிடப்பட்டபோது பிரச்னை தொடங்கியது. பெட்ரோலில் இன்னும் அதிகமாக எத்தனால் கலப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இதில் எந்த சர்ச்சையும் இல்லை. எத்தனால் திட்டத்தின் மூலம், எரிசக்தி துறையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. வளிமண்டல மாசுபாடும் குறைந்துள்ளது. இவ்வாறு ஹர்தீப் சிங் புரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

theruvasagan
செப் 16, 2025 16:33

நம்ம வீட்டு பால்காரன் பாலில் பாதிக்கு பாதி தண்ணி கலந்தாலும் பாலுக்குண்டான ரேட் படி பால் ஊத்தறதைப் போலத்தான் இதுவும். அதாவது காக்கிநாடா எனக்கு. பாவடை நாடா உனக்கு கதைதான்.


kannan
செப் 16, 2025 12:52

கலப்படம் செய்ய ஒரு மந்திரி. ரோடு போடுபவர் ஏன் பெட்ரோலைப் பற்றி பேசுகிறார்? இது பெட்ரோலிய மந்திரியின் வேலையல்லவா?


lana
செப் 16, 2025 11:13

இங்கு கருத்து எழுதும் திராவிட முட்டுகளுக்கு ஒரு விஷயம் தெரியுமா. பெட்ரோல் டீசல் க்கு தமிழக அரசின் வாட் வரி 30 மற்றும் 34% . விலை குறைய மாடலிங் அரசு என்ன செய்தது. விலை குறைப்பு என்று சொல்லி ஓட்டு வாங்கியது.


Ramaraj P
செப் 16, 2025 07:28

இந்தியாவில் பயன்படுத்தும் பெட்ரோல் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே 10% எத்தனால் கலக்கப்படுகிறது. இப்போது சில வருடங்களாக சில பெட்ரோல் நிறுவன பங்க்-ல் 100% பெட்ரோல் கிடைக்கிறது. நாம் பயன்படுத்தும் அனைத்து மோட்டார் பாகங்களும் 10% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு ஏற்றவாறு தான் தயாரிக்க படுகிறது. மேலும் ஏற்கெனவே நாம் போடும் பெட்ரோல் 10% எத்தனால் இருக்கும், இப்போது அது 20% ஆக மாறுவதால் பெரிய பாதிப்பு இருக்காது. மைலேஜ் 1-2% மட்டுமே குறையும். பல நாடுகளில் 100%-பெட்ரோல், 10%- எத்தனால் மற்றும் 20% எத்தனால் இதற்கு தனித்தனி விலை இருக்கிறது அது இப்போது இங்கு இல்லை.


Kasimani Baskaran
செப் 16, 2025 04:13

ஒருபக்கம் மிச்சம் என்றாலும் இதை எல்லா என்ஜின்களும் தாக்குப்பிடிக்க முடியாது. ஐந்து வருடம் ஓடும் எஞ்சின்கள் மூன்று வருடத்தில் காயலான் கடைக்கு அனுப்ப வேண்டிவரும். கார் தயாரித்த நிறுவனம் சான்றிதழ் கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே பிரச்சினை இல்லை என்று அறிக.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 15, 2025 23:08

அப்போ கலப்படம் பண்ணினால் லட்சம் கோடியா பணம் சம்பாதிக்கலாம்ன்னு சொல்ல வர்றீங்களா?


வாய்மையே வெல்லும்
செப் 16, 2025 01:43

செய்துபார்.. கண்டிப்பா ரிவிட்டு நிச்சயம். எதற்காக தர்க்கம்.. திராவிட சிந்தனை உங்காமையும் மொக்கையாக்கிவிட்டது திண்ணம்


மாபாதகன்
செப் 16, 2025 12:13

அந்த உரிமை அரசாங்கத்துக்கு மட்டும்தான். மற்றவர்கள் செய்தால் சட்டவிரோதம்.


Senthilkumar Murugesan
செப் 15, 2025 22:10

1 1/4 லட்சம் கோடி அரசுக்கு லாபம் என்று சொல்கிறார்கள் உண்மை என்ன ஒவ்வொரு அரசியல்வாதியின் வீட்டிலும் இருக்கின்ற பணத்தை எடுத்தாலே போதுமானது இந்த பெட்ரோலில் எத்தனை நாள் கலந்து யாருக்கு லாபம் நீங்களே சொல்லுங்கள் இதனால் ஏழை எளிய பாமர மக்களுக்கு நஷ்டம் அரசியல்வாதி லாபம் அனுபவிக்க பாமர மக்கள் கஷ்டப்பட வேண்டும் இதுவே மோடி அரசின் பித்தலாட்ட வேலை


montelukast sodium
செப் 15, 2025 21:40

சர்க்கரை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தான் இந்த எத்தானால் தயாரிக்கின்றன.இங்கிருந்துதான் பொட்ரோல் எடுக்கும் தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யபடுகின்றன.எத்தனால் தயாரிக்கும்17 தொழிற்சாலைகள் அமைச்சர் நிதின்கட்காரி குடுபத்தாருக்கு சொந்தமானவை


SANKAR
செப் 15, 2025 22:46

Sir I am anti BJP but consider Gadkari as the only man with honesty in BJP.His family is industrial family long ago and his wealth honestly earned.Sugst factories not RECENTLY started by his family.


montelukast sodium
செப் 15, 2025 21:34

பெட்ரோல் விலை குறைந்தால் நம் பெட்ரோல் தேவை மிகவும் அதிகமாகும்.. நாம் இறுதிவரை எரிபொருளுக்காக மற்ற நாடுகளை சார்ந்து இருக்க வேண்டும்... நம்முடைய வருமானத்தில் பெரும்பகுதி பெட்ரோலிய பொருள்கள் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு செல்லும்... ஆகையால் நம் நாட்டில் உள்ள இயற்கை வளத்தையும் எரிசக்தி வளத்தையும் சரியாக பயன்படுத்தினால்.. நாம் பெரிய பொருளாதார நாடாக மாற முடியும்...


montelukast sodium
செப் 15, 2025 21:32

ஏற்கனவே ரஷ்யா தர்ற ஆடி ஆஃபர்ர நமக்கு தர்றாம இவங்களே ஸ்வாகா போடறாங்க... தர்றத தந்தா அதுக்கான வரிகளும் கொறையும்.... 45₹ பெட்ரோலுக்கு 55₹ டேக்ஸ் இப்போ..... ரஷ்ய ஆஃபரை மட்டுமே குறைச்சிருந்தா கூட 30 க்கு 40₹ டேக்ஸ் சேர்த்து 70 ₹க்கு நமக்கு கெடச்சிருக்கும்...இப்போ 30₹ அசலாகிற பெட்ரோலை , வரியும், அநியாய அம்பானிய அதானிய லாபமும் 75₹ 250% சேர்த்து 105₹ விக்கிறாங்க. இதக்கேக்க யாருமே இல்லையா????


சமீபத்திய செய்தி