உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேவையற்ற தலையீடு: ஐநா மனித உரிமை அமைப்பின் கருத்துக்கு இந்தியா கண்டனம்

தேவையற்ற தலையீடு: ஐநா மனித உரிமை அமைப்பின் கருத்துக்கு இந்தியா கண்டனம்

புதுடில்லி: டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து காவலில் வைத்தது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜினாமா கோரி நடைபெற்ற பெரும் போராட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட பெருமளவிலான தடுப்புக்காவல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1r0w3pbt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல தரப்பினரும் பெருமளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாகவும், நிபந்தனையின்றியும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.ஐக்கிய நாடுகள் சபையின் இந்தக் கருத்துகளுக்கு ஜெனிவாவில் உள்ள இந்தியாவின் தூதரகம் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளது. அதன் அறிக்கை: டில்லியில் நடந்த போராட்ட நிகழ்வுகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள கருத்துகளை நாங்கள் கவனித்தோம். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும்; இங்கு அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை இருக்கிறது. மற்ற அனைத்து ஜனநாயக நாடுகளையும் போலவே, இந்திய மக்களும் பொது ஒழுங்கைப் பேணும் வகையில் விதிக்கப்படும் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே இந்த உரிமையைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் இறையாண்மை மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகார அமைப்புகள் சட்டத்திற்கு இணங்கச் செயல்படுகின்றன; குறைகளைத் தீர்த்துக்கொள்ள விரும்பும் எவருக்கும் நமது நீதிமன்றங்கள் அணுகக்கூடிய வகையில் உள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கவலைகள் அடிப்படையற்றவை; அவை இந்தியாவின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீடாக அமைகின்றன. உலகின் பிற பகுதிகளில் நடைபெறும் பெரிய அளவிலான போராட்டங்கள் மீதும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இதேபோன்ற கவனத்தைச் செலுத்துவது பொருத்தமானதாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Dv Nanru
அக் 11, 2026 17:31

டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட கவலைகளுக்கு இந்தியா தனது கண்டனத்தையும் கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது. ஜெனிவாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், குடிமக்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும் சட்ட அமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. பொது ஒழுங்கைப் பராமரிக்கவும் நாட்டின் இறையாண்மையைப் காக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு அமைப்புகள் கருத்து தெரிவிப்பது தேவையற்ற உள்விவகாரத் தலையீடு என்று இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சர்வதேச அமைப்புகள் தங்களது நடுநிலைமைக் கொள்கையைக் கடைப்பிடித்து, உலகின் பிற பகுதிகளில் நடைபெறும் மாபெரும் போராட்டங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கருத்துக்களுக்கு இந்தியா உறுதியான மற்றும் தெளிவான பதிலடியை வழங்கியுள்ளது. நாட்டின் இறையாண்மையைக் காக்கவும், பொது அமைதியைப் பேணவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அமைப்புகள் கருத்து தெரிவிப்பது உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீடு என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது..நன்று


Rajan
அக் 11, 2026 16:24

சும்மா பர்கர் சாப்பிட்டு கோலா குடிக்கும் கூட்டம். இதையெல்லாம் பெருசா கண்டுக்க கூடாது


Kumar Kumzi
அக் 11, 2026 15:18

ஐ நா ஒரு செத்த பாம்பு இந்தியா அதை பற்றி கண்டுகொள்ள தேவையில்லை


Sarasija
அக் 11, 2026 14:06

ஐநா மனித உரிமைக் கழகம் கருத்துத் தெரிவிக்காவிடில் தான் கவலைப்பட வேண்டும். அப்பாடா! கூறிவிட்டார்கள் அல்லவா. இனி கவலை இல்லை! நாம் நம் வேலையைப் பார்க்கலாம்!


சத்யநாராயணன்
அக் 11, 2026 12:41

இந்தியாவின் மறுமலர்ச்சி மற்றும் வேகமான நிலையான முன்னேற்றத்தை கண்டு ஐநா சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் அத்தனைக்கும் வயிற்று எரிச்சல் அவர்களின் புலம்பல்களை நாம் கண்டுகொள்ள தேவையில்லை


Santhakumar Srinivasalu
அக் 11, 2026 12:19

போராட்டம் எந்த வகையில் ஆனது என்று சிந்திக்காமல் ஐ நா ஆணையம் அறிக்கை வெளியிடுவது நியாயம் இல்லை!


ராஜா
அக் 11, 2026 11:53

உலகம் முழுவதும் எந்த நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுத்து பார்த்தாலும் குறைந்தது 5 சதவிகித மக்கள் புலம் பெயர்ந்த அகதிகளாக, போரில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் வாழ்வதாரத்தை பாதுகாக்க ஐநாவுக்கு வக்கில்லை. பெண் காவலர்கள் மீது, பெண்கள் மீதும் தாக்குதல் நடத்திய கழிசடைகளை அடித்து விரட்டியவுடன் பொங்குகிறது. இது தானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளும் செயல்.


NALAM VIRUMBI
அக் 11, 2026 11:37

ஐ நா வை கட்டுப்படுத்துவது அமெரிக்காவே என்பதால் இந்தியாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளது. வங்க தேசத்தில் நூற்றுக்கணக்கான இந்துப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டபோதும், இந்துக்கள் கொல்லப்பட்ட போதும் வாயை மூடி வேடிக்கை பார்த்தது. காரணம் அந்த நாட்டில் ராணுவப் புரட்சி என்பது பெயரில், மக்கள் ஆட்சியை கவிழ்த்து யூசுப் கான் என்ற இந்து எதிர்ப்புவாதியை ஆட்சியில் அமர வைத்து சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக எண்ணற்ற அக்கிரமங்கள் நடத்தியது அமெரிக்காதான். செயின்ட் கிட்ஸ் தீவு தமக்கு கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அங்கே அவ்வளவு கொடுமைகள் நடந்தன. அப்போது ஐ நா மனித உரிமைகள் குழுவின் கண்களுக்கு காமாலை வந்து விட்டதா?


manian
அக் 11, 2026 11:27

UN will not critize Russia on Ukraine.Will not criticise US on violence against blacks gun culture action against immigrants.It is unable stop Ukraine war gaza war immigration problem across Europe.It surrender to big powers.


Varadarajan Nagarajan
அக் 11, 2026 11:10

தற்பொழுது உலகின் பல பகுதிகளில் நடைபெற்றுவரும் போர்களால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொள்ளப்படுகிறார்கள். இவைகளுக்கு ஐ நா அமைப்பு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஒரு ஜனநாயக நாட்டின் சுதந்திரமான அமைப்பின் தலைவர் எந்த முகாந்திரமும் இல்லாமல் ராஜினாமா செய்யவேண்டுமென்று சில அறிவிலிகள் கூறுவதை செவிமடுக்கும் நிலையில்தான் ஐ நா அமைப்பு உள்ளதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. ஒருவேளை நாளை ஐ நா தலைவர் பதவிவிலக்கக்கோரி இதுபோன்ற போராட்டம் நடந்தால் ஏற்றுக்கொள்ளவார்களா?


சமீபத்திய செய்தி