உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருவாய் உபரி கொண்ட 16 மாநிலங்களில் உ.பி., முதலிடம்: சிஏஜி அறிக்கை

வருவாய் உபரி கொண்ட 16 மாநிலங்களில் உ.பி., முதலிடம்: சிஏஜி அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''வருவாய் உபரி கொண்ட 16 மாநிலங்களில் உ.பி., ரூ.37,000 கோடியுடன் முதலிடத்தில் உள்ளன. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை உள்ளது,'' என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களின் பொருளாதார செயல்திறன் குறித்து மத்திய தணிக்கையாளர் ஆய்வில், 16 மாநிலங்கள் வருவாய் உபரியாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து வெளியாகி உள்ள சிஏஜி அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த, 2022- 23ம் நிதியாண்டில் வருவாய் உபரியுடன் 16 மாநிலங்கள் உள்ளன.

வருவாய் உபரி

ரூ.37,000 கோடி வரி உபரியுடன் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. அடுத்தபடியாக குஜராத் (ரூ.19,865 கோடி), ஒடிசா (ரூ.19,456 கோடி), ஜார்க்கண்ட் (ரூ.13,564 கோடி), கர்நாடகா (ரூ.13,496 கோடி), சத்தீஸ்கர் (ரூ.28,592 கோடி), தெலுங்கானா (ரூ.5,944 கோடி), உத்தராக்கண்ட் (ரூ.5,310 கோடி), மத்தியப் பிரதேசம் (ரூ.4,091 கோடி) மற்றும் கோவா (ரூ.2,399 கோடி) வருவாய் உபரி உடன் உள்ளன.வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிபூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகியவையும் இதில் அடங்கும். வருவாய் உபரியுடன் கூடிய 16 மாநிலங்களில், 10 மாநிலங்களில் பாஜ தலைமையிலான ஆட்சி தான் நடக்கிறது. அதேநேரத்தில், 2022-23ம் ஆண்டில், 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியது கண்டறியபபட்டது.

வருவாய் பற்றாக்குறை

இதில் ஆந்திரப் பிரதேசம் (ரூ.43,488 கோடி), தமிழகம் (ரூ.36,215 கோடி), ராஜஸ்தான் (ரூ.31,491 கோடி), மேற்கு வங்கம் (ரூ.27,295 கோடி), பஞ்சாப் (ரூ.26,045 கோடி), ஹரியானா (ரூ.17,212 கோடி), அசாம் (ரூ.12,072 கோடி), பீஹார் (ரூ.11,288 கோடி), ஹிமாச்சலப் பிரதேசம் (ரூ.26,336 கோடி), கேரளா (ரூ.29,226 கோடி), மஹாராஷ்டிரா (ரூ.1,936 கோடி) மற்றும் மேகாலயா (ரூ.44 கோடி) ஆகியவை பற்றாக்குறையை கொண்டுள்ளன.

மானியங்கள்

மத்திய அரசின் வருவாய் மானியங்களால் மீண்டு வரும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கு வங்கம், கேரளா, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியவை இருப்பதால் வருவாய் பற்றாக்குறையில் வேகமாக மீண்டு வருகிறது. மேற்கு வங்கம் தனது வருவாய் வரவுகள் மற்றும் செலவினங்ககளை சமாளிக்க 16 சதவீதம் மானியங்களை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து கேரளா 15%, ஆந்திரப் பிரதேசம் 12%, ஹிமாச்சலப் பிரதேசம் 11% மற்றும் பஞ்சாப் 10% மானியங்களை பெற்று இருக்கிறது.மாநிலங்கள் மொத்தம் ரூ.1,72,849 கோடியை நிதி ஆணைய மானியங்களாகப் பெற்றன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

சாமானியன்
செப் 22, 2025 22:57

நிர்மலாஜி, உபரிநிதியை பேரிடர் நிதியாக உபயோகப்படுத்திக் கொள்ள வழிமுறை தயாரிக்கவும். அல்லது இரயில்வே, ராணுவம், இஸ்ரோ ஆகியவற்றிற்கு திருப்பி விடலாம்.


Venugopal S
செப் 22, 2025 17:58

ஒரு வீட்டில் தகப்பன் தான் பெற்ற குழந்தைகளுக்கு தேவையான உணவு கல்வி மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல் வருமானத்தை மிச்சம் பிடித்து நான் குடும்பத்தை சிறப்பாக நடத்துகிறேன் என்று சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வது போல் உள்ளது!


K V Ramadoss
செப் 22, 2025 20:36

அந்த 16 மாநிலங்கள் தன் மக்களுக்கு அடிப்படை வசதியை செய்து தறவில்லை என்று, எந்த ஆதாரத்தை வைத்து சொல்லுகிறீர்கள் ?


Venugopal S
செப் 22, 2025 17:53

மக்கள் நலத் திட்டங்கள், கல்வி, மருத்துவம்,சமூக நல மேம்பாட்டு திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் இருந்தாலும் நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக விளங்க முடியும். இதற்கு சிறந்த உதாரணம் குஜராத் தான் !


Venugopal S
செப் 22, 2025 17:51

அப்புறமும் ஏன் மத்திய அரசின் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் உத்தரப்பிரதேசம் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்?


Gokul Krishnan
செப் 22, 2025 12:33

இதே சிஐஜி ஒரு சில வாரங்கள் முன் ஒரு அறிக்கை வெளியிட்டது 2014 முதல் 2024 வரை ஜியோ நிறுவனம் பிஸ்னல் நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் லைசென்ஸ் கட்டணம் பாக்கி வைத்து உள்ளது என்று. இந்த அறிக்கை உண்மை என்றால் அந்த அறிக்கையும் உண்மை தானே


lana
செப் 22, 2025 11:39

எதுக்கெடுத்தாலும் எங்கள் வரி ஐ தூக்கி அடுத்த மாநிலம் க்கு குடுக்குறாங்க ன்னு சமச்சீர் சமூக நீதி படி உருட்ட வேண்டியது. வரி இல gst இல் மாநில அரசு பங்கு sgst என்று மாநில அரசின் RBI வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதெல்லாம் நமக்கு புரியாது. சரி தமிழக வரி இல் 40 % சென்னை க்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது தமிழக budget இல் . அப்ப மற்ற மாவட்டங்களுக்கு ஒழுங்கா பிரித்து கொடுத்து விட்டு நாம அடுத்த வர்கள் ஐ குறை சொல்லலாம். தமிழ் நாடு முன்னேற காரணம் இந்த விளங்காத மாடலிங் அரசு காரணம் அல்ல. காமராஜர் காலத்தில் கொண்டு வரப்பட்ட பல நல்ல திட்டங்கள்


Kjp
செப் 22, 2025 11:17

பெத்த பெயர் வாங்க கார் ரேஸ். ஊரெங்கும் அப்பா சிலை சிலை . ஓட்டுக்காக ஆயிரம் ரூபாய் இலவச பஸ் பயணம் வாங்கிய கடன் 5 லட்ச ரூபாய்க்கு வட்டி இன்னும் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா இருந்தால் எப்படி ஒரு உபரி வருவாய் வரும்.


M Ramachandran
செப் 22, 2025 11:16

கடுப்பேத்திரத்தே வேலையாய் போச்சுது.


தமிழன்
செப் 22, 2025 11:07

கொங்குநாடு தமிழ்நாட்டுக்கு நூறு ரூபாய் வரி செலுத்தினால் தமிழ்நாடு கொங்கு நாட்டுக்கு ஒரு ரூபாய் திருப்பி செலுத்துகிறது


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 22, 2025 10:49

வருவாய் பற்றாக்குறை என்று வரும்போது மாநிலங்களை ஒப்பீடு செய்வது சரியா தெரியவில்லை. உதாரணமாக, தமிழகம் ரூ.36,215 கோடி, கேரளா ரூ.29,226 கோடி, இதில் கேரளா நிலப்பரப்பும் ஜனத்தொகையும் தமிழ்நாட்டைவிட மிகவும் குறைவு. இந்த வகையில் கணக்கிட்டால் கேரளா பற்றாக்குறை தமிழ்நாட்டை விட அதிகம்.


சமீபத்திய செய்தி