உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி ரூ.5 லட்சம் செலுத்தவும் யு.பி.ஐ., பயன்படுத்தலாம்; புதிய வரம்பு இன்று முதல் அமல்!

இனி ரூ.5 லட்சம் செலுத்தவும் யு.பி.ஐ., பயன்படுத்தலாம்; புதிய வரம்பு இன்று முதல் அமல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: யு.பி.ஐ., பயன்படுத்தி மூன்று வகை தேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பு ₹5 லட்சமாக இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஒரு பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. * வரி செலுத்துதல், * மருத்துமனைகள், கல்வி நிறுவனங்கள், * ரிசர்வ் வங்கி சில்லறை நேரடி திட்டங்களுக்கு இன்று முதல் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஒரே பரிவர்த்தனையில் செலுத்தலாம். முன்னதாக சராசரியாக நாளொன்றிற்கான அதிகபட்ச யு.பி.ஐ., பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சமாகும். ஆனால் வங்கிகளுக்கு அவற்றின் சொந்த வரம்புகளை அமைக்க அதிகாரம் உள்ளது. மூலதனச் சந்தைகள், வசூல், காப்பீடு உள்ளிட்ட UPI பரிவர்த்தனைகள் தினசரி ரூ. 2 லட்சம் வரம்பைக் கொண்டுள்ளன. தற்போது மூன்று வகை தேவைக்கு பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mohan
செப் 16, 2024 13:01

விடியல் சம்பள பட்டாளமே எதற்கு தேவையின்றி பார்ப்பனர் தமிழ் சொல்லை பயன்படுத்துகிறீர்?. பாஜக வை கீழாக திட்ட வேண்டுமானால் தூய தமிழை பயன்படுத்தவும். எந்த செய்தியானாலும் பாஜகவை திட்டுவதை தவிர்க்க உங்களால் இயலவில்லை என்பது நிதர்சனமாக தெரிகிறது.


Malarvizhi
செப் 16, 2024 12:06

செய்தியை சரியாக படிக்காமல் கருத்து பதிவிடவேண்டாம். நன்கொடைகள் அளிக்க UPI உச்சவரம்பு இன்னும் உயர்த்தப்படவில்லை.


Ramesh
செப் 16, 2024 10:59

ஒனக்கென்னப்பா பைத்தியம் திமுகவிற்கே ஓட்டு போட்டு சமச்சீர் கல்வி படிச்சு இரூக்கிற மூளையை களிமண்ணாக்கி டாஸ்மாக்ல இரண்டு கட்டிங் குடுத்து அப்படியே மாமனும் மச்சானும் வருஷம் 30000 கோடி ஏசி ரூமில் இருந்தே சம்பாதிக்க வழி பண்ணி தருவ. உனக்கு அந்த தறுதலைகளுக்கு உபயோகப்படாத எதுவும் பிரயோஜனம் படாதது தான்.


சமூக நல விரும்பி
செப் 16, 2024 10:48

Good decision


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 10:32

வசதியைப் பயன்படுத்தி பாஜகவுக்கு நன்கொடை கொடுத்துடுங்கோ .... அள்ளிக்கொடுங்கோ ... கிள்ளிக் கொடுக்காதேள் .....


சாமிநாதன்,மன்னார்குடி
செப் 16, 2024 15:14

நீ ஒரு ..ன்னு அப்பப்ப நியாயப் படுத்துற ஆமா நீ எப்படி ... போன?


முக்கிய வீடியோ