உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் எழுச்சியை கண்டு பயப்படும் அமெரிக்கா: வரி விதிப்புக்கு மோகன் பகவத் கண்டனம்

இந்தியாவின் எழுச்சியை கண்டு பயப்படும் அமெரிக்கா: வரி விதிப்புக்கு மோகன் பகவத் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: இந்தியா வளர்ச்சி பெற்றால் தங்களுக்கு என்ன நேரிடுமோ என்ற அச்சத்தில் தான் அமெரிக்கா வரிகளை விதித்து இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.நாக்பூரில் பிரம்மகுமாரிகள் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது; இந்த உலகில் இந்தியா வலுவாக வளர்ச்சி அடைந்தால் என்ன நேரிடும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். அதனால் தான் வரிகளை விதிக்கிறார்கள். 7 கடல்களுக்கு அப்பால் இருக்கிறாய் (அமெரிக்காவை குறிப்பிடுகிறார்). ஆனால் உனக்கு பயம் இருக்கிறது.நாங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் அதை செய்தவரை (பாகிஸ்தான்) அவர்கள் (அமெரிக்கா) ஈர்க்கிறார்கள். அவர்கள் தங்களுடனேயே இருந்தால் இந்தியா மீது அழுத்தம் வரும் என்று நினைக்கிறார்கள். மக்களும், நாடும் தங்கள் உண்மையான சுயத்தை புரிந்து கொள்ளாவிட்டால், தொடர்ந்து பிரச்னைகளை சந்திப்பார்கள். நான் என்ற அணுகுமுறையில் இருந்து நாம் என்று அணுகினால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு அமையும். இன்று உலகிற்கு தீர்வுகள் மிகவும் தேவை.இந்தியா ஒரு சிறந்த நாடாக இருந்தாலும், இந்தியர்களும் சிறந்தவர்களாக இருக்க பாடுபட வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ராஜா
செப் 13, 2025 16:29

முடிந்த வரை தொடர்ந்து கதை சொல்வது எளிது ஆனால் நாட்டுக்கு நல்லது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்


Indian
செப் 13, 2025 09:37

உண்மையான எதிரி , உண்மையானா நண்பன் யாரு என்று முதலில் கண்டுபிடிங்க ?


சிங்
செப் 12, 2025 21:37

நம்ம வளர்ச்சி சீனாவுக்கே பொறுக்கலை. சீக்கிரமே குடைச்சல் குடுப்பாங்க பாருங்க.


அப்பாவி
செப் 12, 2025 21:36

இன்னும் அந்த ஏழுகடல், ஏழு மலை கதைகளையே அடிச்சி உடுங்க...


Sivakumar
செப் 12, 2025 21:26

இந்தியாவின் எழுச்சி உண்மைதான். ஆனால் இது உங்கள் சுதேசி சித்தாந்தத்தினால் வந்த எழுச்சி இல்லை.வாஜ்பாய் மன்மோகன், மோடி என எல்லோரும் நரசிம்மராவ், மன்மோகனின் தாராளமய கொள்கையினால் இந்தியாவை எழுச்சியுற செய்தனர்.


Tamilan
செப் 12, 2025 19:45

தோல்வியடைந்துவிட்டவர்களின் கட்டுக்கதை


குணாளன்
செப் 12, 2025 17:13

வளருகிறவனுக்கு வரியைப் பத்துன பயம் இருக்ககூடாது..


ManiK
செப் 12, 2025 16:15

கடைசி பத்தியை (paragragh) அனைவரும் குறிப்பாக, இளைய தலைமுறையினர் மனதில் சங்கல்பம் ஏற்க பிரார்த்திக்கிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை