உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கையில் தவறு: சசி தரூர்

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கையில் தவறு: சசி தரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: '' இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைகளில் குறிப்பிட்ட தவறு உள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சரி செய்யவும் முடியாது,'' என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியுள்ளார்.வரி விதிப்பு காரணமாக இந்தியா அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி சீனா சென்று வந்த பிறகு அமெரிக்கர்கள் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்டு லுட்னிக் கூறும் போது, இந்தியா மன்னிப்பு கேட்டு, அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் போடும் எனத் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில், காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியதாவது: நாம் மன்னிப்பு கேட்பதற்கு ஒன்றும் கிடையாது. இந்தியா முதிர்ச்சியுடன் நடந்து கொள்கிறது . ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் வர்த்தகத்தை இந்தியா மேற்கொள்ள அமெரிக்க முன்னாள் நிர்வாகம் ஊக்குவித்ததை மறக்கக்கூடாது. சர்வதேச சந்தையில் விலை சீராக இருக்க வேண்டும் என்பதற்காக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்படி அமெரிக்கா கூறியது.அடுத்ததாக, ரஷ்யாவிடம் நாம் வாங்கும் கச்சா எண்ணெயைவிட சீனா அதிகம் வாங்குகிறது. துருக்கியும் நம்மை விட அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்குகிறது. ஐரோப்பா கச்சா எண்ணெய் வாங்காவிட்டாலும், ரஷ்யாவிடம் இருந்து மற்ற பொருட்களை வாங்குகின்றனர். மற்ற நாடுகள் அதிகம் பணம் கொடுக்கும் போது, நாம் தான் ரஷ்யாவின் தாக்குதலை தூண்டிவிடுவதாக கூறுவது விசித்திரமானது.எனவே இந்தியாவிற்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைகளில் குறிப்பிட்ட தவறு உள்ளது என நினைக்கிறேன். இதனை நியாயப்படுத்தவும் முடியாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது. இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. அமெரிக்காவை போல் இந்தியாவும் இறையாண்மை கொண்ட நாடு என்பதை ஹோவர்டு லுட்னிக் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
செப் 08, 2025 04:11

தீம்க்காவினர் யாராவது இதை சொன்னார்களா? வள்ளுவர் புகைப்படத்தில் இருக்கும் திருநீறை அளிப்பதில் முழுநேரத்தையும் வீணடித்து சாதித்தது அவர்களின் முதிச்சியற்ற ஐடி விங். பெயிண்ட் அடிக்க மட்டுமே லாயக்கான ஒரு கட்சி மாநிலத்தை ஆள்வது மகா கேவலம். போலி இந்துக்களுக்கு திராவிடர்களை புரிய முடியவில்லை. அவர்களும் துண்டுசீட்டுக்களாக இருப்பது துரதிஸ்டவசமானது.


Ramesh Sargam
செப் 08, 2025 00:15

ட்ரம்ப் மற்றும் அவரின் ஒருசில அல்லக்கைகள்தான் இந்தியாவுக்கு எதிரான கொள்கை கொண்டுள்ளனர். மற்றபடி அவர்களைவிட்டு அனைத்து அமெரிக்க மக்களும் இந்தியாவுடனான நட்பை மதிக்கின்றனர்.


Tamilan
செப் 07, 2025 23:44

இந்துமதவாதிகள் தேடி பிடித்த உலகமகா வித்துவான் . மோடிக்கு தோல்விவரும்போதெல்லாம் இவர்தான் தாங்கி பிடிப்பதுபோல ஒரு தோற்றம்


J. Vensuslaus
செப் 07, 2025 23:17

நமது பார்வையில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை தவறானது அவர்கள் பார்வையில் நமது கொள்கை சரியானதல்ல. எது சரி எது தவறு என்பதை காலம்தான் சொல்லும். சசி தரூர் சொல்லமுடியாது, அதுவும் இப்போது.


சமீபத்திய செய்தி