உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா முயற்சி: அமெரிக்கா வரவேற்பு

எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா முயற்சி: அமெரிக்கா வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா மேற்கொண்டுள்ள முயற்சியை வரவேற்கிறோம்' என அமெரிக்கா தெரிவித்துள்ளது.அண்டை நாடான சீனாவின் ராணுவம், கிழக்கு லடாக் பகுதிக்குள் 2020 மே மாதம் நுழைய முயன்றது; இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டனர். இதில் கால்வான் பகுதியில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் காரணமாக, இரு நாடுகளின் உறவு சீர்குலைந்தது.இதனால் நான்கு ஆண்டுகளாக எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரும் நேருக்கு நேர் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டது. பல சுற்று பேச்சுக்குப் பின், சமீபத்தில் தான் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி சில நாட்களாக இரு நாடுகளும் ராணுவத்தை வாபஸ் பெற்று வருகின்றனர். 2020ம் ஆண்டு மே மாதத்துக்கு முன் இருந்ததுபோல், எல்லையில் ரோந்துப் பணிகளில் இருநாட்டு ராணுவமும் மீண்டும் ஈடுபடும்.

படைகளை வாபஸ்

இது குறித்து, நிருபர்கள் சந்திப்பில், அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது: எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். இரு நாடுகளும் ஆரம்பகட்ட நடவடிக்கையாக ராணுவ படைகளை வாபஸ் பெற்றதை நாங்கள் புரிந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M Ramachandran
அக் 30, 2024 16:50

அமெரிக்கா வயற்றிச்சலுடன் வர வேர்ப்பு. கைய்புள்ள சதி வேலைய்ய எய்ய இல்லை. அதுவும் அமெரிக்கானுக்கு கடுப்பாகி போச்சி.


nadraj
அக் 30, 2024 16:10

who the ......you?


Ramesh Sargam
அக் 30, 2024 12:42

உலகில் எங்கே எது நடந்தாலும் அமெரிக்காவின் பெரிய மூக்கு நுழைந்துவிடும்.


அண்ணா
அக் 30, 2024 11:41

தய்வான் நாட்டின் மீது போர் தொடுக்கும் நோக்கத்தில் இந்த பக்கம் நமது எல்லையில் அமைதி என்ற பெயரில் விலகி இருக்கிறார்கள். தய்வான் வெற்றிக்கு பிறகு சீனாமீண்டும் தனது வாலை ஆட்டும் பாருங்கள்.


Gokul Krishnan
அக் 30, 2024 09:56

இந்த அமெரிக்கா ...மூக்கை நுழைய விட வேண்டாம்


RAMESH K
அக் 30, 2024 08:41

என்ன அமெரிக்கா வரவேற்குதா.....அடங்கொப்புரானே......இந்த டகால்டி எல்லாம் வேற எங்கன சொல்லும்...


முக்கிய வீடியோ