உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசி விஸ்வநாதர் கோவில் அருகே 2 வீடுகள் இடிந்து தரைமட்டம்; ஒருவர் பலி: 8 பேரை மீட்க தீவிரம்

காசி விஸ்வநாதர் கோவில் அருகே 2 வீடுகள் இடிந்து தரைமட்டம்; ஒருவர் பலி: 8 பேரை மீட்க தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: காசி விஸ்வநாதர் கோவில் அருகே இரண்டு வீடுகள் இடிந்து தரைமட்டமானது. ஒருவர் பலி; இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.உத்தரபிரதேசம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே 2 வீடுகள் இன்று (ஆகஸ்ட் 06) இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் 8 பேர் சிக்கினர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணி

இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார்; மீட்பு பணியின் போது, காயமடைந்த ஒரு போலீஸ்காரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 8 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால், அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. கனமழை காரணமாக, வீடு இடிந்து விழுந்துள்ளது என மீட்புப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

P. VENKATESH RAJA
ஆக 06, 2024 12:50

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்


அப்பாவி
ஆக 06, 2024 12:46

வேலை மிச்சம்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி