உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., என்கவுன்டரில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை

உ.பி., என்கவுன்டரில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி., ஷாம்லி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா பகுதியில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் குற்றவாளிகள் கும்பலுக்கு இடையே என்கவுன்டர் நடந்தது. இந்த நிகழ்வு, குற்றவாளிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பியோட முயற்சி செய்ததால், நடந்துள்ளது. அப்போது குற்றவாளிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தனர்.ஒரு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்துள்ளார்.அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உயிரிழந்த குற்றவாளிகளில் மூவரின் உடல் அடையாளம் காணப்பட்டது. அர்ஷத் சஹரன்பூரைச் சேர்ந்தவர், மஞ்சீத் சோனிபட்டைச் சேர்ந்தவர், சதீஷ் கர்னாலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு குற்றவாளியின் உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஜன 21, 2025 19:59

என்கவுண்டர்... இதுதான் சரியான தண்டனை குற்றவாளிகளுக்கு. உபி அரசு செய்யும்போது, மற்ற அரசுகள் இந்தமுறையை ஏன் செய்ய மறுக்கிறது? ஏன் என்றால், மற்ற மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் குற்றம் புரிபவர்கள் எல்லாம் ஆளும் கட்சியின் விசுவாசிகள், தொண்டர்கள். அவர்களைப்போய் என்கவுண்டர் செய்யமுடியுமா? நியாயமா?


Barakat Ali
ஜன 21, 2025 17:44

சார் ..... சார் .... இரும்புக்கை மாயாவி சார் ........... கவனிச்சீங்களா சார் ????


Kumar Kumzi
ஜன 21, 2025 15:01

சூப்பர் இங்க ஓங்கோல் விடியலின் கைக்கூலி படை இருக்கு அது கோபாலபுரம் அடிமை படை


raja
ஜன 21, 2025 13:22

புல்டோசர் விட்டா தானே கோர்ட் கண்டிக்கும்....போலீஸ விட்டு என்கவுண்டர் பண்ணிட்டா...வாழ்க யோகி...


krishnan
ஜன 21, 2025 16:24

good


Laddoo
ஜன 21, 2025 12:15

மிக மிக சரி. இங்கிருக்கும் சிரிப்பு போலீசை அங்கே அனுப்பி வைக்கலாம்


Nandakumar Naidu.
ஜன 21, 2025 11:54

கொஞ்சம் U P போலீஸை இங்கே தமிழகத்திற்கு அனுப்புங்களேன் பிளீஸ்.


KavikumarRam
ஜன 21, 2025 10:17

சிறப்பு


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 21, 2025 10:14

சமூக விரோதிகளை டுமீலு நாடு மாதிரி வளர்த்துவிடாமல் போட்டுத் தள்ளுவது பெரிய விஷயம் ......


JeevaKiran
ஜன 21, 2025 10:06

தமிழ்நாட்டிலும் இதுபோல் நடந்தால், குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது நடக்குமா?


முக்கிய வீடியோ