மேலும் செய்திகள்
உத்தரகன்னடா கடற்கரையில் பாதுகாப்பு கேள்விக்குறி
21-Dec-2024
தொண்டையில் பலுான் சிக்கி சிறுவன் பலி
03-Dec-2024
ஒடிஷாவில் நடந்த குங்பூ போட்டியில், உத்தரகன்னடா மாணவர்கள் தங்கம் வென்று, கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.ஒடிஷாவின் புரியில் சமீபத்தில் குங்பூ போட்டி நடந்தது. இதில் உத்தரகன்னடாவின் ஹொன்னாவராவை சேர்ந்த ஆராத்யா அலோக், ஆரோன் அந்தோனி, அலோக், யஷஸ், புவன், ஜெகதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர். இவர்கள் ஹொன்னாவராவின் ராயல் அகாடமியில் பயிற்சி பெறுவது வழக்கம். இவர்களுக்கு ராகவேந்திரா ஹொன்னாவரா பயிற்சி அளிக்கிறார்.அகாடமி சார்பில் மாணவர்கள், தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை பெற்றுள்ளனர். ஒடிஷாவில் சமீபத்தில் குங்பூ போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆராத்யா, ஆரோன் அந்தோனி, அலோக், யஷஸ் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றனர். ஜெகதீஷ் வெள்ளி பதக்கம் பெற்றார். இதன் மூலம் இவர்கள், கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்தனர்.இதே அகாடமி சார்பில் விளையாடிய கீர்த்தனா, நவீன் மூன்றாம் இடத்தை பிடித்தனர். - நமது நிருபர் -
21-Dec-2024
03-Dec-2024