உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொது சிவில் சட்டத்தின் கீழ் திருமணம் கட்டாய பதிவு! உத்தரகண்ட் அதிரடி

பொது சிவில் சட்டத்தின் கீழ் திருமணம் கட்டாய பதிவு! உத்தரகண்ட் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்; அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் திருமணத்தை பொது சிவில் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரகண்ட் அறிவித்துள்ளது. உத்தரகண்டில் நாட்டிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்டம் அமலாகி இருக்கிறது. இந்த புதிய சட்டம், மாநிலத்தில் உள்ள அனைத்து சாதி, மதம், பாலினம் ஆகியவற்றுக்கு பொருந்தும். மேலும், திருமணம், வாரிசு உரிமை, விவாகரத்து, திருமணம் செய்து கொள்ளாமல் தம்பதி போல வாழ்வது ஆகியவற்றை மட்டுமே இச்சட்டம் குறிப்பிடுகிறது.இந்நிலையில், அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் திருமணத்தை பொது சிவில் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும், இது கட்டாயம் என்று உத்தரகண்ட் அறிவித்துள்ளது. மார்ச் 26ம் தேதி, 2010ம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற திருமணங்களை பதிவு செய்யுமாறு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.இந்த பதிவுகள் மீதான நம்பகத்தன்மை குறித்து உரிய முறையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் நெறிப்படுத்த வேண்டும். அது தொடர்பான அறிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரகண்ட் அரசு கூறி உள்ளது.எவ்வித தாமதமும் இன்றி திருமண பதிவுகள் ஆவணப்படுத்தும் வகையில், தொழில் நுட்ப உதவிகளை செய்து தருமாறு உத்தரகண்ட் மாநில தகவல் தொழில் நுட்பத்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
மார் 17, 2025 10:06

மாநில அரசுகளுக்கு இவ்வளவு உரிமைகள் உள்ளனவா? ஒருவேளை இந்திய ஒன்றிய அரசால் பொது சிவில் சட்டம் கொண்டுவந்தால் இன்னொரு மாநில அரசு அதை ஏற்றுக்கொள்ளாமல் வேறொரு சட்டம் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.


ஆரூர் ரங்
பிப் 25, 2025 11:30

இணைவி, துணைவி, பிணைவி யையும் பதிவு செய்ய முடியுமா?


GMM
பிப் 25, 2025 10:30

பிறப்பு, திருமணம், விவாகரத்து, இறப்பு பதிவு அடிப்படையில் ஓட்டுரிமை, குடியுரிமை இருக்க வேண்டும். இதற்கு நிரந்தர பதிவு எண் அவசியம். இவையில்லாமல் அரசு சட்டம் ஒழுங்கு, நிர்வாகம் செய்வது கடினம்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 25, 2025 09:28

லவ் ஜிகாத் ஐ கட்டுப்படுத்துவதற்காக இது அவசியமே ......


shyamnats
பிப் 25, 2025 08:23

இந்தியா முழுவதும் வரவேண்டிய சட்டம். சட்டங்கள், மத அடிப்படையில் வளைக்க பட கூடாது.


Mettai* Tamil
பிப் 25, 2025 09:30

பாராட்டுக்கள் ..இந்தியா முழுமைக்கும் இச்சட்டம் வரவேண்டும் ....


சமீபத்திய செய்தி