உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வைஷாலியின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை: பிரதமர் மோடி பாராட்டு

வைஷாலியின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை: பிரதமர் மோடி பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ''சிறந்த சாதனை படைத்த வைஷாலிக்கு வாழ்த்துக்கள். அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=prgfhvbp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று வரலாறு படைத்தார் இந்தியாவின் ஆனந்த்குமார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 2025ம் ஆண்டு ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் சீனியர் ஆண்கள் 1000 மீட்டர் ஸ்பிரின்ட் பிரிவில் தங்கம் வென்றதற்காக ஆனந்த்குமாரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது மன உறுதி, வேகம் மற்றும் உற்சாகம் அவரை ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் முதல் உலக சாம்பியனாக்கியுள்ளது. அவரது சாதனை எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். அவரது அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M. PALANIAPPAN, KERALA
செப் 16, 2025 11:50

வாழ்த்துக்கள் வைஷாலி, இறைவன் எப்பொழுதும் அருள் புரியட்டும் ஜெய்ஹிந்த், வாழ்க பாரதம்


பாரத புதல்வன்
செப் 16, 2025 10:26

வாழ்த்துக்கள் தங்கப் பெண்ணே...!


sankaranarayanan
செப் 16, 2025 10:17

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் திராவிட மாடல் அரசு ஏன் வாழ்த்து தெரிவிக்காமல் மவுனம் சாதிக்கிறதோ தெரியவில்லை ஓஹோ அதுதான் காரணமா சரி சரி


என்னத்த சொல்ல
செப் 16, 2025 12:38

CM and DCM நேற்றே வாழ்த்து சொல்லிட்டாங்க..


Artist
செப் 16, 2025 09:50

திராவிடாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் என்ன சங்கோஜம் ?


S.kausalya
செப் 16, 2025 10:44

நாங்க இதுல இட ஒதுக்கீடு கேட்கிற தாக உள்ளோம்.


புதிய வீடியோ