உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் ரயில்: தீபாவளிக்கு அறிமுகம்

நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் ரயில்: தீபாவளிக்கு அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தீபாவளி மற்றும் சாத் பண்டிகையை முன்னிட்டு நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கப்பட உள்ளது. 994 கி.மீ., தூரம் பயணிக்கும் இந்த ரயில் டில்லியில் இருந்து பாட்னா வரை செல்ல உள்ளது.அக்.,31 அன்று தீபாவளி பண்டிகை நாடு முழுதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதேபோல், வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் 'சாத்' பண்டிகையும் நவ., முதல் வாரத்தில் வருகிறது. இதனை முன்னிட்டு, வெளியூரில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வர். அவர்கள் பயணம் செய்ய முதல் தேர்வாக ரயில் பயணம் இருக்கும். பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை அறிவிக்கும். அந்த வகையில், தீபாவளி அன்று பயணிகளின் வசதிக்கு ஏதுவாக நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. டில்லியில் இருந்து பீஹார் தலைநகர் பாட்னா வரை இந்த ரயில் இயக்கப்படும். இரு நகரங்களுக்கு இடையிலான 994 கி.மீ., தூரத்தை 11.5 மணி நேரத்தில் கடந்து செல்லும். இதற்கு முன்னர், டில்லி - வாரணாசி இடையில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் தான், நீண்ட தூரம் செல்லும் ரயில் என்ற பெருமை பெற்றது.புதிதாக அறிமுகம் செய்யப்படும் டில்லி - பாட்னா வந்தே பாரத் ரயில் அக்.,30 முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் 'சேர் கார்' இருக்கையில் பயணிக்க ரூ.2,575ம், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் இருக்கையில் பயணிக்க ரூ.4,655ம் கட்டணம் வசூலிக்கப்படும். உணவு மற்றும் தேநீர் கட்டணமும் இதில் அடக்கம்.டில்லியில் காலை 8:25 மணிக்கு கிளம்பும் ரயில், பாட்னாவிற்கு இரவு 8 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் பாட்னாவில் காலை 7:30 மணிக்கு கிளம்பும் ரயில், டில்லிக்கு இரவு 7 மணிக்கு வந்தடையும். இடையில் கான்பூர், பிரயாக்ராஜ், பக்ஸர், அராஹ் ஆகிய நகரங்களில் நிற்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Uma
அக் 19, 2024 09:10

சென்னை புது டெல்லி வந்தே பாரத் எப்போது


Ganesun Iyer
அக் 18, 2024 21:11

ஆங்கிலேயருக்கு அடிமைபட்டவனுங்க இங்க சுயசார்பு முன்னேற்றத்துக்கு எதிரா விஷத்தை கக்கறாங்க..


சாண்டில்யன்
அக் 18, 2024 19:06

1. முன்பதிவு செய்யும் காலம் 120 நாளோ 60 நாளோ எதுவாயினும் ஆரம்பிக்கும் முதல் நாள் முதல் பத்து நிமிடங்களில் விற்று தீர்ந்து காத்திருப்போர் பட்டியல் ஆரம்பித்து விடுகிறது 2. முன்னதாக கனபார்ம் செய்தவர்கள் ரத்து செய்யும்போது கட்டணம் நிறைய பிடித்தம் செய்கிறார்கள் 3. காத்திருப்போர் என்னாச்சுன்னு பார்த்து பார்த்து கண் பூத்ததுதான் மிச்சம் 4. ரயில் கட்டணத்தை நாலு மாதம் முன்பே அழுது விட்டு செல்போனை நோண்டிக் கொண்டேயிருந்ததுதான் மிச்சம் 5. கடைசியில் திரும்பக் கிடைத்ததை பெற்று பஸ்ஸுக்கு ஓடுகிறார்கள் 6. அடிப்படையில் ரெண்டு நாள் லீவுன்னா அடிச்சு பிடிச்சு ஊருக்கு ஓடுவானேன்? 7. அப்படியென்ன வாழத் தகுதியில்லாத ஊரிலா வந்து குடியேறி உள்ளார்கள்? 8. அங்கே சொந்த ஊரில் என்ன பாலாறும் தேனாறும் ஓடுகிறதா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 18, 2024 18:40

இலவசங்களுக்கு பழகி போனவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும் என்றால் கட்டண கொள்ளை கட்டணம் அதிகம் என்று பேசுவார்கள். அனைத்திலும் மான்யம் வேண்டும் முடிந்தால் அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும். சுய மரியாதை இழந்த இலவசங்கள். ஓட்டு போட கூட வீடு தேடி வந்து பணம் கால் கொலுசு சேலை கொடுக்க வேண்டும்.தன் மானம் என்பது இன்று எங்கே கிடைக்கும் இலவசமாக கிடைக்குமா என்று தேடுகின்றனர்.


Kailasam
அக் 18, 2024 18:31

இத்தனை காலமாக கரும்புகையை கக்கிக்கொண்டு வெள்ளை காரன் உருவாக்கிய ரயிலேயே ஓட்டிக்கொண்டு திரிந்தோம் இப்பொழுது தான் நமது நாட்டின் ரயில்வே துறை நவீனமயப்மாக்கப்பட்டு வருகின்றது எனவே அரசாங்கத்தை குறை கூறுவதை விட்டுவிட்டு அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நமது முண்டாசுக் கவிஞன் பாரதி சொன்னதைப் போல குண்டூசி முதல் இந்த உலகம் நடுங்க பெரிய கப்பல் வரை நாம் நம் நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் நமது தொழில்நுட்பம் ராணுவம் அனைத்தையும் கண்டு உலக நாடுகள் அச்சப்படும் நாள் வர வேண்டும் அந்த நாள் தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரத் திருநாள் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்


G.VINOTHKUMAR
அக் 18, 2024 16:44

வந்தே பாரத், போன பாரத் என்று சொல்லி கட்டண கொள்ளை அடிக்கிறார்கள் மிக மிக அதிக கட்டணம்


brittopharma
அக் 18, 2024 17:36

இந்த ரயிலால் எந்த பயனும் இல்லை


Vaduvooraan
அக் 20, 2024 19:16

ஹூம்...ஓசியில் வாங்கியே பழக்கப்பட்டு விட்டோம்..கஸ்டமாத்தான் இருக்கும்.


G.VINOTHKUMAR
அக் 18, 2024 16:44

வந்தே பாரத், போன பாரத் என்று சொல்லி கட்டண கொள்ளை அடிக்கிறார்கள் மிக மிக அதிக கட்டணம்


Nandakumar Naidu.
அக் 18, 2024 16:40

சென்னை - மும்பை வந்தே பாரத் எப்போது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை