உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்: சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு

பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்: சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழக பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமனை நியமித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தமிழக போலீஸ் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நேற்று ஓய்வு பெற்றார். இவரது ஓய்வுக்கு பின், டிஜிபி அலுவலகத்தில் நிர்வாக பிரிவு டிஜிபியாக பணியாற்றிய வெங்கட்ராமனை, பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1j0z0msv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இதனை எதிர்த்து பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பின் ஹென்றி திபேன் சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.அவரது மனுவில் கூறியுள்ளதாவது: டிஜிபி நியமனத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. டிஜிபி பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு யுபிஎஸ்சிக்கு அரசு டிஜிபி பதவிக்கு தகுதியானவர்களின் பரிந்துரை பட்டியலை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு பட்டியல் அனுப்பாதது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. நீதிமன்ற உத்தரவை மீறி பொறுப்பு டிஜிபியை தமிழக அரசு நியமித்துள்ளது. இவ்வாறு அந்த மனுவில் ஹென்றி திபேன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Kannapiran Arjunan
செப் 01, 2025 23:01

நீதிமன்ற அவமதிப்பு Contempt of court, ஒருவர் ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அல்லது உத்தரவு அல்லது வழிகாட்டு நெறிகளை மதிக்காது செயல்படுவதை நீதிமன்ற அவமதிப்பு என்பவர். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பொறுப்பு டிஜிபி நியமனம் பற்றி அல்ல.. எனவே நீதிமன்ற அவமதிப்பு இல்லை...


Kannapiran Arjunan
செப் 01, 2025 22:48

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு பொறுப்பு டிஜிபி நியமனம் பற்றி அல்ல.. எனவே இந்த அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்ய முடியும்


Tamilan
செப் 01, 2025 22:24

அநாகரீகத்தின் உச்சம்


sun
செப் 01, 2025 20:52

கவர்னர் தாமதமாக முடிவெடுக்கிறார்? அல்லது முடிவெடிக்க மறுக்கிறார் என உச்ச நீதி மன்றம் சென்றது தமிழக அரசு. இந்த நிகழ்வுக்கு யார் பொறுப்பு? தமிழக டி.ஜி.பி. 31.08.2025 ஓய்வு பெறுவது அன்றுதான் தமிழக அரசுக்கு தெரியுமா? முன்பே உரிய நடவடிக்கை எடுத்திருக்க முடியாதா? தமிழ்நாட்டின் உச்சபட்ச காவல் துறை பதவியான டிஜிபிஐ கூட பொறுப்பு டி.ஜி.பியாக அறிவிக்கும் நிலையில் தான் தமிழக அரசு நிர்வாக எந்திரம் உள்ளதா?


M S RAGHUNATHAN
செப் 01, 2025 20:41

ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் கால நிர்ணயம் செய்யும் உச்ச நீதிமன்றம் முக்கியமான விஷயத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை திமுக அரசு மீறியதற்கு என்ன செய்யப் போகிறது? உச்ச நீதிமன்றமே புதிய DGP ஐ நியமிக்கலாமே ? ஆளுநருக்கு ஒரு நீதி, முதல்வருக்கு ஒரு நீதியா ? மாநில அரசுகள் குறிப்பிட்ட காலத்தில் உச்ச நீதி மன்றம் உத்தரவுப் படி நடக்கவில்லை என்றால் to DGP ஐ மத்ய உள்துறை அமைச்சர் நியமிக்கலாம் என்று சொல்லுமா ,? அப்படி சொன்னால் அது நீதி மன்றம். இல்லையென்றால் அது திமுக கட்சியின் நீதிமன்ற அணி.


Mahendran Puru
செப் 02, 2025 07:55

எதற்கும் கால நிர்ணயம் செய்யக்கூடாது என்று தொண்டை வறண்டு போகுமளவுக்கு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கத்திக் கொண்டிருக்கிறது. இப்போ இந்த விஷயத்தில் இரட்டை வேஷம் போடுமா? இதிலே இந்த ஹென்றி டிஃபன் என்பவருக்கு என்ன பசி?


பேசும் தமிழன்
செப் 02, 2025 09:52

அவர் நாட்டை நேசிக்கும் ஆள்...உங்களை போல் 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி க்கு முட்டு கொடுக்கும் ஆள் அல்ல !!!


PRS
செப் 01, 2025 20:35

ஹென்றிக்கு அஜித் கேஸ்ல எத்தனை வாங்கின?


GMM
செப் 01, 2025 19:40

பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமனத்தை எதிர்த்து பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பின் ஹென்றி திபேன் சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அனுமதிக்கும் போது, இது போன்று நேரடியாக பாதிக்காதவர் பொது நல வழக்கு அனுமதிக்க கூடாது என்று வேறு ஒரு அமைப்பு வழக்கு தொடர்ந்தால், வழக்கறிஞர் , நீதிபதி முடிவு என்னதாக இருக்கும்?


sankaranarayanan
செப் 01, 2025 19:34

முதல்வருக்கு லிஸ்டை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க நேரமில்லையாம் அவரது வெளி நாட்டு பயனம் முன்னுரிமை கொடுக்கப்பட்டு அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யும் பொது சற்றே தாமதம்தான் ஆகும் இப்போதைக்கு யார் டி ஜி பியாக இருந்தால் என்ன அவர் இருந்தும் ஒன்றுதான் இல்லாமலும் ஒன்றுதான் எல்லாமே முதல்வர்தான் இங்கே


rama adhavan
செப் 01, 2025 19:31

இந்த வழக்கு இல்லாவிட்டால் இந்த நிகழ்வு வருங்காலத்தில் தவறான முன் உதாரணம் ஆகும். அனைத்து மாநில அரசும் இந்த நடைமுறையைப் பின் பற்றும். நிரந்தர டி ஜி பி நியமனத்தை அரசியல் காரணத்திற்கு இழுத்து அடிக்கும்.


அருண் பிரகாஷ் மதுரை
செப் 01, 2025 18:28

உச்சநீதிமன்றமா..அதை எதுக்கு உருட்டுக்கிட்டு அப்படிங்கிற மனோ பாலா காமெடி ஞாபகம் வருகிறது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை