துணை ஜனாதிபதி வேட்பாளர்: 17 ம் தேதி பாஜ. ஆலோசனை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: துணை ஜனாதிபதி பதவிக்கு யாரை நிறுத்துவது என்பது குறித்து முடிவு செய்ய வரும் 17 ம் தேதி பாஜ பார்லிமென்ட் குழு கூட்டம் நடைபெற உள்ளது.துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்., 9 ல் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினமே ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கி நடந்துவருகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்தப் பதவிக்கு யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், தேஜ கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்ய பாஜ பார்லிமென்ட் குழு கூட்டம் வரும் 17 ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், டில்லியில் பாஜ தலைவர் நட்டாவை மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தினர் .