உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா மாதிரியே சட்டசபை தேர்தலிலும் வெற்றி: சரத்பவார் திட்டவட்டம்!

லோக்சபா மாதிரியே சட்டசபை தேர்தலிலும் வெற்றி: சரத்பவார் திட்டவட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மஹாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த லோக்சபா தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி வெற்றி பெற்றது போல, மாநில சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என என்.சி.பி. (சரத்பவார்) அணியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) அணியை சேர்ந்த பாபா சித்திக் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இது பெரும் மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, டில்லியில் மஹா விகாஸ் அகாடி கூட்டணியை சேர்ந்த, சிவசேனா(உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் நானா படோலி மற்றும் என்.சி.பி. (சரத்பவார்) சரத்பவார் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.பின்னர் சரத்பவார் கூறுகையில், 'மஹாராஷ்டிராவில் தற்போதுள்ள மகாயுதி கூட்டணி அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டது. தற்போதைய அரசிடமிருந்து மக்களை விடுவிக்க வேண்டும், மக்கள் எங்களுக்குத்தான் ஆதரவளிப்பார்கள்.பன்ஜரா சமூகத்திற்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என பிரதமர் மோடி, சொல்லி வருகிறார். வசந்த்ராவ் நாயக், மாநில முதல்வராக பணியாற்றினார். பா.ஜ., தான் எதுவும் செய்யவில்லை.மகா விகாஸ் அகாடி கூட்டணி, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது போல், வரும் சட்டசபை தேர்தலிலும் வெற்றிபெறும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.உத்தவ் தாக்கரே கூறுகையில், 'சமீபத்தில் நடந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ., விற்கு இடையே ஓட்டு வித்தியாசம் சிறு வித்தியாசமே இருந்தது. இந்நிலையில் தான் பா.ஜ., கூடுதல் சீட்களை பெற்று ஆட்சி அமைத்தது. மகாயுதி கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார் என அறிவித்தால், மகா விகாஸ் அகாடி கூட்டணியும் அறிவிக்கும்,' இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.காங்கிரஸ் தலைவர் நானா படோலி கூறுகையில், 'பிரதமர் பேசும் அரசியல் பேச்சுக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். எங்களது அடிப்படை நோக்கம், தற்போதுள்ள அரசை தோற்கடிக்க வேண்டும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது இப்போது முக்கியமில்லை,' என சரத்பவார், படோலி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
அக் 14, 2024 07:44

மகாராஷ்டிரா மாநிலத்தில் இண்டி கூட்டணி புட்டு கொள்வது நாட்டுக்கு நல்லது.


ramani
அக் 14, 2024 04:25

ஏமாற்ற தயார் என்று சொல்லாமல் சொல்கிறார் சரத்பவார்


Narayanan Sa
அக் 13, 2024 22:47

எந்த அரசியல் வாதிக்கும் நம் இந்தியா நாட்டை பற்றியோ அல்லது நம் நாட்டு மக்களை பற்றியோ கவலை இல்லை அவர்கள் வெற்றி பெற வேண்டும் சொத்து சேர்த்து நிம்மதியா வாழ வேண்டும். இது தான் அவர்கள் நிலை பாடு. இப்படி பட்டவர்களை தேர்தலில் நிற்க அனுமதிக்க கூடாது.


KR
அக் 13, 2024 21:55

In Maharashtra both NCP and SS factions are perfect politicians. They will have no qualms to form post poll alliances as needed to get to power. People should give zero seats to both SS and NCP factions to avoid ugly post poll alliances. All seats should go to BJP or Congress party as one expects atleast both these parties to join a post poll alliance in Maharashtra


Sathyanarayanan Sathyasekaren
அக் 13, 2024 20:51

பிஜேபி அஜித் பவாரை வெளியேற்றவேண்டும்.


RAAJ68
அக் 13, 2024 20:22

லோக்சபாவில் எந்த மாதிரியான வெற்றி அதனால் என்ன பிரயோஜனம் ஆட்சி அமைக்க முடியவில்லை.


Balasubramanian
அக் 13, 2024 20:06

எவ்வளவு தைரியம்! காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஜெயிப்போம் என்று அறிவிப்பதற்கு! அவர்கள் டகாடக் என்று ஏதாவது சொல்லி மாட்டி விடுவார்


sankaranarayanan
அக் 13, 2024 18:44

உங்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் அதிகமாக விளங்கும்போது எங்கேப்பா கூட்டணி தர்மம் நிலை நிறுத்தப்படும் உதவா தாக்கரையை நம்பித்தான் போன முறை அமைச்சரவை அமைக்கப்பட்டு கவிழ்ந்தது மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை தினந்தோறு ம் சாதுக்கள் தாக்கப்பட்டனர் இந்துக்கள் தாக்கப்பட்டனர் இனி அவைகள் நீடிக்க இடமே இல்லை


Sudha
அக் 13, 2024 17:59

இவ்ளோ பெரிய ஸ்டேட் இவ்வளவே தான் politics


முக்கிய வீடியோ