உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி உறுதி: அடித்துச் சொல்கிறார் அமித் ஷா!

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி உறுதி: அடித்துச் சொல்கிறார் அமித் ஷா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தமிழக சட்டசபைத் தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு: வரவிருக்கும் சட்டசபை தேர்தல்களில் பீஹார், தமிழகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம். தமிழக சட்டசபை தேர்தலில், நிச்சயம் உறுதியான வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருவதால் மொழி பிரச்னையை கிளப்புகின்றனர்.

பிரகாசமான எதிர்காலம்

ஆனால் இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மிகவும் தெளிவுடன் இருக்கின்றனர். இந்திய மொழிகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. தொகுதி மறு வரையறையை, யாரும் எந்த புகாரும் சொல்வதற்கும் இடமில்லாமல் செய்து முடிப்போம். தி.மு.க., இந்த பிரச்னையை கிளப்புவது 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தான்.

இடஒதுக்கீடு

மக்கள் தொகை கணக்கீட்டின் முடிவுகள் 2027ம் ஆண்டு கடைசியில் கிடைக்கும். பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் ஒரு சில மாதங்கள் முன்கூட்டியே கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. வரும் 2029ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தல் ஆனது, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு உடன் நடத்தப்படும். இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

xyzabc
ஜூன் 27, 2025 12:43

தமிழக மக்கள் பணத்துக்குத்தான் வோட்டை போடுவார்கள்.


malanguyasin
ஜூன் 25, 2025 09:39

2026 ல் மீண்டும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பாஜக மோசமான தோல்வியை சந்திக்கும்


J.Isaac
ஜூன் 21, 2025 21:56

உங்கள் தந்திரங்கள் தமிழ் நாட்டில் எடுபடாது.


தஞ்சை மன்னர்
ஜூன் 21, 2025 13:00

ஊழல் அழுக்கு எடுக்கும் வாஷிங் மெஷின் எடுத்துக்கிட்டு வண்டி நிறைய அழுக்கோடு வருகிறார் விலகி வழிவிடுங்கோ


Karthik Madeshwaran
ஜூன் 21, 2025 12:52

தமிழ்நாடு தேர்தலில் வெற்றி உறுதி - அமித்ஷா : இத்துடன் நகைசுவை செய்திகள் முடிவடைந்தன. மீண்டும் அடுத்த தேர்தலில் 2031- அதையே சொல்வோம். வாய்விட்டு சிரிப்போம்.


Appan
ஜூன் 21, 2025 12:46

இந்தியாவில் ஆங்கிலம் படிக்க கூடாது. இந்திதான் படிக்கணும் சொல்லி தமிழகத்தில் ஒட்டு கேட்ட என்ன ஆகும் தெரியுமா .?.அதிமுகவுக்கு ஒரு அல்ல தலைவர் தேவை. அதை அண்ணாமலை செய்வார் என்று எதிர்பார்ப்போம். அண்ணாமலை வரவால் தமிகத்தில் தோன்று கிறது. வளருமா ../.


Vigilraj
ஜூன் 21, 2025 12:14

ஆங்கிலம் படிங்க மிட்ஷா


Vigilraj
ஜூன் 21, 2025 12:12

ஆங்கிலம் படிங்க அமித் ஷா


Mettai* Tamil
ஜூன் 21, 2025 12:54

மொதல்ல உங்க கூட்டத்தை தமிழ நல்லா படிக்க சொல்லுங்க ...


பாமரன்
ஜூன் 21, 2025 11:57

ஒரு பகோடா பீஸாவது கம்பெனிக்கு இங்கே எப்படி முன்னேறனும்னு ரோஜனை சொல்லுதா... ம்ஹூம்... தான் அடிவாங்கறத பார்த்து சிரிக்கிறவனை சாபம் குடுக்குதுக... இல்லைன்னா அவன் அன்னிக்கு உழுந்தானேன்னு குதூகலப்படுதுக... தூரத்தில் இருந்து தார்மீக ஆதரவு மட்டுமே குடுக்கும் இதுக தான் ரியல் டேஞ்சர்... வார் ரூம் எஃபெக்ட் மற்றும் களத்தில் இருந்து வேலை செய்யறதுக்கான டிஃபரன்ஸ் தான் இது... ஒப்பாரி கண்டினியூ பண்ணுங்கயா... அவனுவ மெய்யாலுமே நீங்க திட்டுற இருநூறு வாங்க போறானுவ...


guna
ஜூன் 21, 2025 12:52

மட சாம்பிராணி பாமர கதறல்....


venugopal s
ஜூன் 21, 2025 11:42

வாங்கப்பு, வைக்கிறோம் உங்களுக்கு பெரிய ஆப்பு!


Mettai* Tamil
ஜூன் 21, 2025 12:40

நாங்களும் நெறய ஆப்புகளை டவுன்ளோடு பண்ணிவச்சுருக்கோம் ...ஊழலுக்கு எதிரான ஆப்பு கிடைப்பது உறுதி ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை