உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீடியோ பதிவை நீக்குங்கள்: கெஜ்ரிவால் மனைவிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வீடியோ பதிவை நீக்குங்கள்: கெஜ்ரிவால் மனைவிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை, உடனடியாக நீக்க வேண்டும் என அவரது மனைவி சுனிதாவுக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vkgmhijk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக வைபவ் சிங் என்ற வழக்கறிஞர் டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, மார்ச் 28ல் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்பாக பேசினார். இது வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. நீதிமன்ற விதிகளுக்கு எதிரான செயல் இது எனக் கூறியிருந்தார். இந்த வீடியோவை சுனிதா மற்றும் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நீனா பன்சால் கிருஷ்ணா மற்றும் அமித் ஷர்மா அடங்கிய அமர்வு, '' சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை உடனடியாக நீக்குவதுடன், அது தொடர்பாக நீதிமன்றத்தில் சுனிதா விளக்கம் அளிக்க வேண்டும். வேறு யாரேனும் அந்த வீடியோவை மறுபதிவேற்றம் செய்தால், சமூக வலைதள நிறுவனங்கள் அதனை உடனடியாக நீக்க வேண்டும்'' என உத்தரவிட்டது. மனு மீதான விசாரணையை ஜூலை 9 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

konanki
ஜூன் 17, 2024 04:16

ஓண்ணாம் நம்பர் பிஃராடு. அரசியல் டிராமா செய்யும் மோசடி பேர்வழி


S Ramachandran
ஜூன் 15, 2024 20:20

கேஜ்ரிவால் அரசியலில் நாடகம் நடித்தார்போல் கோர்ட் விசயத்திலும் நடிக்க ஆரம்பித்தார். அவரது மனைவியும் சேர்ந்து ஒன்றாக நடிக்கிறார்கள்


Kasimani Baskaran
ஜூன் 15, 2024 14:38

சந்தர்ப்பம் வந்தால் கோர்ட்டையே மடக்கலாம் என்று பதிவு செய்திருப்பார்.


தத்வமசி
ஜூன் 15, 2024 13:27

அதிகம் படித்த கணவன் மனைவி, ஆனால் செய்வது படித்தது போல இல்லை. முதலில் நாட்டின் மீது மதிப்பும் மரியாதையும் வேண்டும். அப்போது தான் ஊழல் செய்ய மனம் வராது.


subramanian
ஜூன் 15, 2024 13:05

காலிஸ்தான் தீவிரவாதம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 15, 2024 12:36

இதெல்லாம் ஒரு பேச்சுக்கு தான். பதிவு செய்து வெளியிட்டது யார் என்று தெரியும். அது தவறு என்றும் தெரியும். பின்னர் எதற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ். தண்டனை அறிவிக்க வேண்டியது தானே. கோர்ட்டாருக்கு பொழுது போகவில்லை போலும்.


தத்வமசி
ஜூன் 15, 2024 14:02

வீடியோ எடுக்கும் போது அதை தடுக்க வேண்டியவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ?.. பாமரன், பணக்காரன், பதவியில் இருப்பவர் என்று எல்லாம் வேறு படும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ