உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமலையில் கண்காணிப்பு முற்றிலும் தோல்வி: தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் குற்றச்சாட்டு

திருமலையில் கண்காணிப்பு முற்றிலும் தோல்வி: தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் குற்றச்சாட்டு

திருமலை: திருமலை திருப்பதியில் கண்காணிப்பு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்று தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பூமண கருணாகர ரெட்டி கூறினார்.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பூமண கருணாகர ரெட்டி அளித்த பேட்டி:திருமலை விவகாரத்தில் முந்தைய அரசை கடுமையாக விமர்சித்த இப்போதைய கூட்டணி கட்சியினர், ஆட்சியில் இருக்கும்போது என்ன நடக்கிறது?திருமலையில் கண்காணிப்பு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.திருமலையில் மது மற்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்படுகிறது என்று முதல்வர் கூறுகிறார்.ஸ்ரீவாரி கோயில் அருகே அசைவ பிரியாணி பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது திருப்பதி தேவஸ்தானத்தின் தோல்வி எண்ணிக்கையில் மேலும் ஒன்று சேர்ந்துள்ளது.மிக மோசமான சூழ்நிலையை திருமலை திருப்பதியில் அவர்கள் ஏற்படுத்தி விட்டனர்.ஆனால் ஊடகங்கள் மூலம் பொய்யான பிரசாரத்தை பரப்பியுள்ளார்கள்.திருப்பதி தேவஸ்தான தலைவர், தெலுங்கு தேச கட்சி தலைவர்களுக்கு சேவை செய்கிறார், பக்தர்களைப் பற்றி அவருக்கு கவலையில்லை.திருமலையில் 4 முறை செம்மர கடத்தலில் சிக்கியவர் அவர். லட்டு பிரசாதம் விஷயத்தில் எங்களைக் குறை கூறினர். எங்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.இத்தகைய தவறுகளுக்காக,சனாதன ஹிந்து தர்மத்திற்கான பீடாதிபதிகள், இந்துத்துவ அமைப்புகள் போன்றவர்கள், பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடுவை கேள்வி கேட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.இவ்வாறு பூமண கருணாகர ரெட்டி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி