சண்டிகர்: தங்கள் கட்சியில் வந்து சேருமாறு பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து அழுத்தம் வருவதாக பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.தகுதிநீக்கம்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் நுழைந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடைப்பிரிவில் தங்கம் நிச்சயம் என்று நாடே எதிர்பார்த்த நிலையில் தகுநீக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாராட்டு
தங்கம் இல்லாவிட்டாலும் அவரது உழைப்பு, ஆர்வம், வேகம் ஆகியவற்றை கண்டு நாடே அவரை பாராட்டியது. தாய்நாடு திரும்பியபோது தலைநகர் புதுடில்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சொந்த மாநிலமான ஹரியானாவில் பல்வேறு ஊர்களில் ஏராளமான மக்கள் அவரை அழைத்து பாராட்டி மகிழ்கின்றனர். பரிசுகளையும் வழங்கி தங்கள் அன்பை பொழிந்து வருகின்றனர்.தொடர் அழுத்தம்
இந்நிலையில், ஹரியானாவில் உள்ள ஜிந்த் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி ஒன்றில் வினேஷ் போகத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; அரசியலில் சேர வேண்டும் என்று பல்வேறு கட்சிகளிடம் இருந்து எனக்கு தொடர்ந்து அழுத்தம் வருகிறது. ஆனால் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. கவனம்
குடும்பத்தில் உள்ள மூத்தவர்களிடமும், நலன் விரும்பிகளிடமும் விவாதித்து அடுத்தக்கட்ட முடிவை எடுப்பேன். விளையாட்டு, அரசியல் இரண்டிலும் கவனம் செலுத்துவேன் என்று பேசி உள்ளார். தேர்தலில் போட்டி
வினேஷ் போகத் எப்படியும் அரசியலில் களம் இறங்கத்தான் போகிறார், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று அவரது உறவினர்கள் கூறி உள்ளனர். அவரின் நெருங்கிய உறவினரும், மல்யுத்த வீராங்கனையுமான பபிதா குமாரி, 2019ம் ஆண்டு பா.ஜ.,வில் இணைந்தார். காங். சீட்
வரும் தேர்தலில் அவர் போட்டியிடக்கூடும் என்ற நிலையில் அவருக்கு எதிராக வினேஷ் போகத் களம் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தேர்தலில் அவருக்கு சீட் வழங்க காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அரசியலில் களமிறங்குவது தொடர்பான அவரின் தற்போதைய பேச்சுகளுக்கும் இதுவே காரணம் என்றும் கருதப்படுகிறது.