உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடையாள அரசியலை ஒழித்து கட்டுங்கள்; டிரம்ப் கட்சியினருக்கு விவேக் ராமசாமி எச்சரிக்கை

அடையாள அரசியலை ஒழித்து கட்டுங்கள்; டிரம்ப் கட்சியினருக்கு விவேக் ராமசாமி எச்சரிக்கை

வாஷிங்டன்: 'அடையாள அரசியலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இது குடியரசுக் கட்சிக்கு பொருந்தாது,' என்று அமெரிக்காவில் நடந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர் விவேக் ராமசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கவர்னர், அட்டர்னி ஜெனரல் உள்ளிட்ட பதவிகளுக்கு நடந்த தேர்தலில் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து பேசிய டிரம்பின் ஆதரவாளரும், இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி, குடியரசு கட்சிக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது; நியூ ஜெர்சி, வர்ஜீனியா மற்றும் நியூயார்க் நகரத்தில் நமக்கு தோல்வி கிடைத்துள்ளது. ஜனநாயக கட்சியினர் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலின் மூலம் குடியரசுக் கட்சியினருக்கு இரு முக்கிய பாடங்கள் கிடைத்துள்ளன. முதலாவது, வாழ்வாதார செலவைக் குறைத்து, அமெரிக்க மக்களின் கனவை மீண்டும் எட்டக்கூடியதாக மாற்ற வேண்டும். மின்சாரம், மளிகை சாமான்கள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வீடுகள் ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க வேண்டும். அதை நாம் எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம் என்பதை தெளிவாக விளக்க வேண்டும்.'இரண்டாவதாக, அடையாள அரசியலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இது குடியரசுக் கட்சிக்கு பொருந்தாது. அது இடதுசாரிகளின் விளையாட்டு. உங்கள் தோல் நிறம் அல்லது மதம் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. உங்கள் குணாதிசயங்களே, நாம் யார் என்பதை வரையறுக்கிறது, இவ்வாறு அவர் கூறினார். முன்பு அதிபர் தேர்லில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, அடுத்தாண்டு மே 5ம் தேதி நடக்கும் ஓஹியோ மாகாணத்தின் கவர்னர் பதவிக்கு போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
நவ 06, 2025 04:11

என்ன செய்தாலும் வரி மூலம் எல்லாம் சரியாகி விடும் என்ற ஆலோசனை சொன்ன மேதை இருக்கும்வரை இதே நிலை தொடரும்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 06, 2025 00:17

வேண்டுமென்றால் இவரும், தற்போது உஷா வான்ஸ் ஆக இருக்கும் அமெரிக்க இரண்டாம் பெண்மணியும் அமெரிக்க இந்து முன்னணி கட்சி ஆரம்பித்து டிரம்புக்கு பல்லக்கு தூக்கி அரசியல் செய்யலாம் என்று அரசியல் ஜாம்பவான்கள் கூறி வருகிறார்கள்.


கண்ணன்
நவ 06, 2025 11:25

பாவம் குழம்பிப்போயுள்ளிர்கள்


தாமரை மலர்கிறது
நவ 05, 2025 19:54

விவேக் திறமையானவர். அமெரிக்காவை வளர்த்தெடுக்கும் அறிவு கொண்டவர். ஆனால் அவர் இருக்கும் கட்சி அவரை ஏற்றுக்கொள்ளாது. சசி தரூர் போன்று தவறான கட்சியில் பயணிக்கிறார்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 06, 2025 00:03

இவர் தவறான கட்சியில் பயணிக்கிறாராம். மோடி வோட்டு கேட்ட வலது சாரி குடியரசு கட்சியில் தான் இருக்கார். பொய், பொருளாதார மோசடி என்று பல சிறப்புகள் இவருக்கு. பாஜகவிலே சேர தகுதியான நபர் தான், உங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவர் அமெரிக்க அரசியலில் காலாவதியான உணவுப் பண்டம். ஆறிப் போய் ஊசிப்போன வடை.


RAMESH KUMAR R V
நவ 05, 2025 17:33

அதிகார துஸ்பிரயோகம் அதன் விளைவு தோல்வியே.


A viswanathan
நவ 05, 2025 19:34

மக்களின் நலனில் அக்கறை இல்லாததே.


முக்கிய வீடியோ