உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சதீஷ் முதல்வராக விருப்பம் தேர் மீது பழம் வீசிய தொண்டர்

சதீஷ் முதல்வராக விருப்பம் தேர் மீது பழம் வீசிய தொண்டர்

சித்ரதுர்கா: 'அடுத்த முதல்வர் சதீஷ் ஜார்கிஹோளி' என அவரது ஆதரவாளர் ஒருவர், வாழைப்பழத்தில் எழுதி, ரதத்தின் மீது வீசினார்.பொதுவாக கோவில்களில் ரத உத்சவங்கள் நடக்கும் போது, பக்தர்கள் வாழைப்பழங்களில் தங்களின் வேண்டுதலை எழுதி, ரதத்தின் மீது வீசினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இத்தகைய உத்சவங்கள் நடக்கும் போது, அந்தந்த கட்சிகளின் தொண்டர்கள், தங்கள் தலைவருக்கு பதவி கிடைக்க வேண்டும் என, வாழைப்பழத்தில் எழுதி ரதம் மீது வீசுவது வழக்கம்.சித்ரதுர்கா, செல்லகரேவின், நாயகனஹட்டி கிராமத்தில் நேற்று ரதோத்சவம் நடந்தது. அப்போது காங்கிரஸ் தொண்டர் ஒருவர், வாழைப்பழத்தில், 'அடுத்த முதல்வர் சதீஷ் ஜார்கிஹோளி' என எழுதி, ரதம் மீது வீசினார்.ஏற்கனவே கர்நாடக காங்கிரசில், முதல்வர் மாற்றம் குறித்து பரபரப்பாக சர்ச்சை நடக்கிறது. நடப்பாண்டு நவம்பர் வேளையில், சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து கீழே இறங்குவார் என, எதிர்க்கட்சியினர் ஆரூடம் கணிக்கின்றனர். தலித் முதல்வர் பேச்சும் அடிபடுகிறது.இச்சூழ்நிலையில், சதீஷ் ஜார்கிஹோளி முதல்வராக வேண்டும் என, ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை