உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் அடையாள அட்டை 15 நாளில் வீடு தேடி வரும்

வாக்காளர் அடையாள அட்டை 15 நாளில் வீடு தேடி வரும்

புதுடில்லி: வாக்காளர் அடையாள அட்டை, 15 நாட்களுக்குள் வீடு தேடி வரும் புதிய நடைமுறையை, இந்திய தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.வாக்காளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரைவுபடுத்தவும், எளிதாக்கவும் இந்திய தேர்தல் கமிஷன் கடந்த நான்கு மாதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் விரைவில் கிடைக்க, புதிய ஏற்பாடுகளை செய்துள்ளது. முன்னர், வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டையை பெற, ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த புதிய நடைமுறையின் வாயிலாக, அடையாள அட்டை வினியோக நேரம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, புதிய வாக்காளர் சேர்க்கை அல்லது வாக்காளர்களின் விபரங்களில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டால், சம்மந்தப்பட்ட நபருக்கு 15 நாட்களுக்குள் புதிய அடையாள அட்டை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக வாக்காளர்களுக்கு தகவல்கள் அனுப்பப்படும் என்பதால், அவர்கள் தங்கள் அட்டையின் நிலையை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ