உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியலில் முறைகேடு : சோனியா மீது எப்.ஐ.ஆர்., பதியக்கோரி வழக்கு

வாக்காளர் பட்டியலில் முறைகேடு : சோனியா மீது எப்.ஐ.ஆர்., பதியக்கோரி வழக்கு

புதுடில்லி: இந்திய குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் பட்டியலில் காங்., முன்னாள் தலைவர் சோனியாவின் பெயர் இடம்பெற்றது தொடர்பாக எப்.ஐ.ஊ்., பதியக்கோரி டில்லி கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.காங்., முன்னாள் தலைவர் சோனியா இத்தாலியில் பிறந்தவர். முன்னாள் பிரதமர் ராஜிவை திருமணம் செய்துகொண்டார். அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே, 1980ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் மோசடியாக பெயர் சேர்க்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது தொடர்பாக விகாஷ் திரிபாதி என்பவர் டில்லி ரோஸ் அவென்யூ தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 'குடியுரிமை இல்லாத நிலையில், 1980ம் ஆண்டே வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பெயரை சேர்த்து தேர்தல் முறைகேடு செய்துள்ளார்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.'இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சோனியா மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். மனுவை ஏற்று விசாரணை நடத்திய தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் வைபவ் சவுரஸ்லா, உரிய சட்டவிதிகளின் கீழ் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை செப்.10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !