உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும்: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் திட்டவட்டம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும்: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும் என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதற்கு, வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் நடைமுறையோடு ஏன் குழப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சுதன்ஷு துலியா, ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7qjy9hir&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, ''ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக கருத முடியாது. வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும். குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் தான் முடிவு எடுக்க வேண்டும். பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது சரிதான். இதற்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.பின்னர், சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:* வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் நடைமுறையோடு ஏன் குழப்ப வேண்டும்.* தேர்தல் இல்லாத காலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையை செய்யலாமே?* குறுகிய கால அவகாசத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது ஏன்?* குடியுரிமையை நீங்கள் சரிபார்க்க வேண்டுமென்றால், நீங்கள் சீக்கிரமாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்; இது சற்று தாமதமானது. * ஆதார், வாக்காளர் ஐடி, ரேஷன் கார்டு ஆகியவற்றை தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நிறுத்த, சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

visu
ஜூலை 10, 2025 23:06

மேற்கு வங்கம் பீகார் அசாம் போன்ற மாநிலங்களில் வங்க தேசிகள் குவிந்து விட்டனர் இவர்களுக்கு வாக்குரிமை வேறு கொடுக்க வேண்டுமா தமிழ் ஆட்டில் கூட பல வங்கதேசத்தவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றால் எந்த அளவு ஊடுருவி ள்ளனர்


தமிழ்வேள்
ஜூலை 10, 2025 21:09

இஸ்லாமிய பகுதிகளில் மட்டும் ஆதார் அட்டை 140 சதவீதம் அதிகமாக உள்ளது.. அதாவது 100 பேருக்கு 140 அட்டைகள்.. ஆதார் ஆணையம் மட்டுமே மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது..ஆதார் தரவுகளை ஏற்பளிப்பது மாநில அரசு & அதன் ஊழியர்கள்..எனவே ஓட்டு வங்கிக்காக ஏராளமான போலிகள்..ரேஷன் கார்டு கூட அதே கதைதான்..எனவே தேர்தல் ஆணையம் சொல்வது மிகவும் சரியான ஒன்று.... மாநில அரசின் அதிகாரங்கள் வெகுவாக குறைக்க வேண்டும்.. அப்போது தான் தேச பாதுகாப்பு சமரசம் இல்லாமல் இருக்கும்..


தாமரை மலர்கிறது
ஜூலை 10, 2025 20:58

போலி வாக்காளர்களை வைத்து, கள்ளஓட்டு போட்டு ஜெயிக்க காங்கிரஸ் திட்டம் போடுகிறது. ஆனால் வாக்காளர் பட்டியல் திருத்தும் நாடு முழுவதும் அமலாகி, போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். பதினோரு குடிமகன் சான்றிதழ்கள் கொடுக்கப்படவேண்டும் என்று சுப்ரிம் கோர்ட் ஒத்துக்கொண்டுவிட்டது.


GMM
ஜூலை 10, 2025 20:39

Aadhaar and voter ID are not allowed to be linked. Some duplicates will be removed. CAA not able to implement. It helps to identify migrating Indian citizens. In British rule, the date of birth of children must be registered. After 15 days the childs name must be given to the municipality. Otherwise criminal action will be taken? Please ask your grandmother. We dont have citizenship certificates including judges?. How the ECI will give voter ID.? Only the Congress, DMK legal team know the answer.


sankaranarayanan
ஜூலை 10, 2025 19:13

ஆதார், வாக்காளர் ஐடி, ரேஷன் கார்டு ஆகியவற்றை தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நிறுத்த, சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. உச்ச நீதி மன்றத்தின் நல்ல முடிவு இதை நாடு முழுவதும் உடனே அமல் படுத்த வேண்டும் போலி வாக்காளர்கள் அந்நிய நாட்டின் கைகூலிகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் எதிர் காட்சிகள் எந்த ஆட்சேபனைகளும் செய்யாமல் இதற்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்


GMM
ஜூலை 10, 2025 17:28

ஆதார் குடியுரிமை சான்று கிடையாது என்று சொன்னது யார்? ரேஷன் கார்டு வயது வித்தியாசம் இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயர் இருக்கும். இவை எப்படி குடியுரிமை சான்று ஆகும்? கள்ள குடியேறிகள் அதிகம்.? ஒரு நீதிபதி வாக்கை குடியுரிமை அல்லாதவர் சமன் செய்து விடுவர். குடியுரிமை அறிந்த வாக்காளர் பட்டியல் அவசியம். இதனை நீதிமன்றம் விசாரிக்க அரசியல் சாசனத்தில் அதிகாரம் இருக்காது. ? நீதிபதி ஜனாதிபதி உறவு எஜமான் வேலைக்காரன் உறவு கிடையாதாம். 25 ஆண்டுகளாக தீர்வை உரிய அதிகார அமைப்பிடம் ஒப்படைக்காமல் பத்திரமாக கட்டி வைத்து விட்டார்கள். ? நீதிமன்றம் அரசியல் சாசனத்தில் இருக்கிறதா?


Kulandai kannan
ஜூலை 10, 2025 17:26

தேர்தல் இல்லாத சமயம் என்பதே நம்நாட்டில் இல்லை.


Sivagiri
ஜூலை 10, 2025 16:52

எங்கேயாவது வெடிகுண்டு மிரட்டல் வந்தால் , அடுத்த நொடியே தேடுதல் வேட்டையில் இறங்குவதுதான் நடைமுறை , அதெல்லாம் இல்லை ஆபீஸ் வேலை நேரத்தில் முடியாது சாயங்காலம் வாங்கன்னு , சொல்ல முடியாது , , ,


முருகன்
ஜூலை 10, 2025 16:41

தேர்தல் கமிஷன் அவசர கதியில் செய்து ஏன் 4 வருடமாக என்ன செய்வது கொண்டு இருந்தனர் என்பதே கேள்வி


GMM
ஜூலை 10, 2025 15:48

வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும். அச்சமற்ற பதில். ஆதார் குடியுரிமை கிடையாது. சட்ட பூர்வ பதில். தேர்தல் இல்லாத காலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தவறு. இட பெயர்வு அதிகம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் திருத்தம் சரியானது. இந்திய குடியுரிமை உள்ளவருக்கு வாக்குரிமை. இரு அரசியல் சாசன அமைப்புகளில் Executive Authority அதாவது தேர்தல் ஆணையம் பதிலை ஏற்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை