உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் 2ம் கட்ட தேர்தலில் 68.52 சதவீத ஓட்டுகள் பதிவு

பீஹாரில் 2ம் கட்ட தேர்தலில் 68.52 சதவீத ஓட்டுகள் பதிவு

பாட்னா: பீஹாரில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலில் 68.52 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இரு கட்டங்களாக நடந்தது., ஆளும் பா.ஜ., - எதிர்க்கட்சியான காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, புது போட்டியாளராக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

முதற்கட்ட தேர்தல்

ஆளும் தே.ஜ., கூட்டணி யின் முதல்வர் வேட்பாள ராக நிதிஷ் குமார் நிறுத்தப் பட்டுள்ள நிலையில், 'மஹாகட் பந்தன்' கூட்டணி யில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். பீஹாரின், 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில், கடந்த 6ல் முதற்கட்ட தேர்தல் நடந்தது. இதில், 65 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

ஓட்டுப்பதிவு

இந்நிலையில், முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள சம்பாரண் மேற்கு, கிழக்கு, சீதாமர்ஹி, மதுபனி, சுபவுல், அராரியா உள்ளிட்ட மாவட்டங்களில், 122 தொகுதிகளில், இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று (நவ., 11) நடைபெற்றது. காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. இந்தத் தேர்தலில் 68.52 சதவீத ஓட்டுக்கள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

நவ.,14ல் ரிசல்ட்

ஓட்டுகள், வரும் 14ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஆர்வத்துடன் ஓட்டளியுங்கள்!

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பீஹார் சட்டசபை தேர்தலில் இன்று இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, பதிவான ஓட்டுக்களின் எண்ணிக்கையில் புதிய சாதனையைப் படைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.குறிப்பாக முதல் முறையாக ஓட்டளிக்கும் எனது இளம் நண்பர்கள் தாங்கள் ஓட்டளிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

66.91 ஓட்டுப்பதிவு

பீஹாரில் இரண்டு கட்ட தேர்தல்களையும் சேர்த்து மொத்தமாக 66.91 சதவீதம் ஓட்டுப்பதிவு; இதுவரை இல்லாத வகையில் 71.6 சதவீத பெண்கள் வாக்களித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SUBBU,MADURAI
நவ 11, 2025 16:55

Bihar Election Phase 2 Turnout till 11 AM turnout 2020: 19.37 % 2025: 31.38 % Net Increase: 12.01% points The way Bihar is voting, it appears they are going to give a strong one sided mandate.


AHAMED MUSTHAFA NAINA SHALAY
நவ 11, 2025 15:22

மக்கள் எத்தனை ஓட்டு போட்டாலும் பிஜேபியை வெல்ல முடியாது அது எழுதப்பட்ட தீர்ப்பு


ديفيد رافائيل
நவ 11, 2025 11:16

முதல் கட்ட தேர்தல் எப்ப நடந்துச்சு


vadivelu
நவ 11, 2025 13:25

உங்களில் பலர் மதவாதிகள் இல்லை , மதம் ரொம்ப பிடித்தவர்கள்.


முக்கிய வீடியோ