உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேடப்பட்ட குற்றவாளி என்கவுன்டரில் பலி

தேடப்பட்ட குற்றவாளி என்கவுன்டரில் பலி

யமுனாநகர்,:மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை உட்பட பல வழக்குகளில் தேடப்பட்டவர், நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். ஹரியானா மாநிலத்தில், மிரட்டி பணம் பறித்தல், சட்டவிரோத துப்பாக்கி விற்பனை உட்பட பல வழக்குகளில், பீமா என்பவரை போலீசார் நீண்ட நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில், யமுனா நகர் ரடோலி சாலையில் பீமா நடமாடுவதாக தகவல் கிடைத்தது. போலீஸ் படை விரைந்து சென்றது. ஆனால், போலீசாரை நோக்கி, பீமா துப்பாக்கியால் சுட்டார். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்த பீமா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி