உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பறவை மோதியதால் விபத்தா?

பறவை மோதியதால் விபத்தா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அகமதாபாத்: விமானத்தின் இரண்டு இன்ஜின்களிலும் பறவைகள் மோதியதால் விமான இயக்க சக்தி முற்றிலுமாக இல்லாமல் போயிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக டி.ஜி.சி.ஏ., எனப்படும், மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம் அளித்து உள்ளது.டி.ஜி.சி.ஏ., அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட, 'ஏர் - இந்தியா'வின், போயிங் 787 விமானத்தில், 230 பயணியர், 2 விமானிகள் மற்றும் 10 விமான கேபின் பணியாளர்கள் இருந்தனர்.விமானம் புறப்பட்டதற்குப் பின், ரன்வே 23ல் இருந்து பறக்க துவங்கிய உடனேயே, விமானிகள் 'மேடே' எனும் ஆபத்துக்கான அழைப்பை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு அனுப்பினர். அதன்பின், விமானத்துடன் எந்த தொடர்பும் ஏற்படாமல் போனது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலைய எல்லைக்கு வெளியே உள்ள தரையில் விழுந்தது. விபத்து நடந்த இடத்தில் இருந்து கரும்புகை காணப்பட்டது.விமானம் நேரடியாக அகமதாபாத் மேகானி நகர் பகுதியில் உள்ள பி.ஜே., மருத்துவக் கல்லுாரியின் விடுதியின் கட்டடத்தின் மீது விழந்தது. விமானத்தின் இரண்டு இன்ஜின்களிலும் பறவைகள் மோதியதன் காரணமாக விமான இயக்க சக்தி முற்றிலுமாக இல்லாமல் போயிருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.விமானம் பறப்பதற்கு முன்னர் பறவைகள் சுற்றி இருந்ததற்கான சாட்சிகள் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த விமான விபத்துக்கான முழுமையான காரணங்களை உறுதி செய்ய விசாரணை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சாமானியன்
ஜூன் 13, 2025 06:40

பறவை கிடையாது. நம்பாதீர்கள். ஏதோ ஒரு மெக்கானிஷம் ஜாம் ஆகியிருக்க வாய்ப்பு அதிகம்.


தியாகு
ஜூன் 13, 2025 11:28

கட்டுமர திருட்டு திமுக ஊழல் செய்யாத லஞ்சம் வாங்காத கட்சி என்று சொல்லுவதை மட்டும் எப்படி நம்புகிறீர்கள்?


முக்கிய வீடியோ