உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீர் மறுசுழற்சி செய்வது கட்டாயம் புதிய வீடுகள் கட்டுவோருக்கு நிபந்தனை

நீர் மறுசுழற்சி செய்வது கட்டாயம் புதிய வீடுகள் கட்டுவோருக்கு நிபந்தனை

பெங்களூரு: பெங்களூரில் புதிய வீடுகள் கட்டுவோர், தண்ணீரை மறுசுழற்சி செய்வதை கட்டாயமாக்குவது குறித்த விதிமுறையை, குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறியதாவது:பெங்களூரில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ளது. குடிநீர் வாரியம் எவ்வளவு தண்ணீர் வினியோகித்தாலும், கோடை காலத்தில் சில பகுதிகளின் மக்கள், குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.குடிநீர் வாரியம் நகருக்கு வினியோகிக்கும் நீரில், 40 சதவீதம் தண்ணீர், வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்துவதால் வீணாகிறது.நீரை மிச்சப்படுத்தும் நோக்கில், புதிதாக கட்டப்படும் வீடுகளில், நீர் மறுசுழற்சி செய்வதை கட்டாயமாக்க, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்தும் நோக்கத்தில், பெங்களூரின் 120 பிளாட்டுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது.இனி புதிதாக கட்டப்படும் தனி வீடுகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இதுகுறித்து வல்லுனர்களுடன் நான்கைந்து முறை ஆலோசனை நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறை வகுக்கும்படி, மாநில அரசிடம் குடிநீர் வாரியம் கேட்டுக் கொள்ளும்.குடிநீர் பிரச்னை அதிகம் உள்ள நாடுகளில், இந்தியாவும் ஒன்று. இதுபற்றி, 2018 நிதி அயோகின் நீர் நிர்வகிப்பு அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. நாட்டில் அடுத்தாண்டு 22 சதவீதம், 2050ல் 32 சதவீதம் குடிநீர் தேவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.நீரை மறுசுழற்சி செய்து, வீட்டின் தோட்டங்கள், கழிப்பறைக்கு பயன்படுத்தலாம்; 50 சதவீதம் நீரை மிச்சப்படுத்தலாம். ட்டில் குளித்த, பாத்திரம் கழுவிய, துணி துவைத்த நீர் செல்வதற்கு தனித்தனி பைப்லைன் பொருத்த வேண்டும். இந்த நீரை சேகரிக்க, தனி சின்டெக்ஸ் அல்லது தொட்டி வசதி செய்து கொள்ள வேண்டும்.இவற்றை தோட்டத்துக்கும் கழிப்பறைக்கும் பயன்படுத்தலாம். இந்த நீரில் ஷாம்பு, சோப்பு கவர்கள், கழிவு பொருட்கள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை