உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனிதனின் பேராசைக்கு இயற்கை தந்த பதிலடி: வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள உயர்நீதிமன்றம் கருத்து

மனிதனின் பேராசைக்கு இயற்கை தந்த பதிலடி: வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள உயர்நீதிமன்றம் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: மனிதனின் அலட்சியம் மற்றும் பேராசைக்கு எதிராக இயற்கை எதிர்வினையாற்றும் என்பதற்கான உதாரணம் தான் நிலச்சரிவு சம்பவம் என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.கடந்த ஜூலை 30 கேரள மாநிலத்தில் 200க்கும் மேற்பட்டவர்களை உயிரிழக்க காரணமான வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று (ஆக.,24) இந்த வழக்கை விசாரித்த ஏகே ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் ஷியாம் குமார் அமர்வு கூறியதாவது: மனிதனின் அலட்சியம் மற்றும் பேராசைக்கு எதிராக இயற்கை எதிர்வினையாற்றும் என்பதற்கான உதாரணம் தான் நிலச்சரிவு சம்பவம். இதற்கான அறிகுறிகள் நீண்ட நாட்களாக தென்பட்டது. ஆனால், மாநிலத்தை பொருளாதார வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக அதனை நாம் புறக்கணித்தோம். 2018 , 2019ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர், கோவிட் பெருந்தொற்று, நிலச்சரிவு ஆகியன நாம் செல்லும் பாதையில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டுகின்றன. நமது வழிகளில் உள்ள தவறுகளை சரி செய்து, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ayyappan M
ஆக 25, 2024 11:20

சரிங்க


Ramesh Sargam
ஆக 24, 2024 22:02

வயநாட்டில் இயற்கை ஆடிய கோரத்தாண்டவம் வேறு எங்கும் நிகழக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இறைவன் என் வேண்டுதலுக்கு செவி மடுப்பார். ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள், பேராசை பிடித்த மக்கள் இனிவரும் காலங்களிலாவது இயற்கையை அழிக்காமல் அதை பேணிப்பாதுக்காக்கவேண்டும். என் இந்த விருப்பத்துக்கு அவர்கள் செவி மடுப்பார்களா...? சந்தேகம்தான்,,


enkeyem
ஆக 24, 2024 19:47

ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார்கள்


God yes Godyes
ஆக 24, 2024 19:31

மலை ஒத்த மண் மேட்டின் மீது செங்கல் கான்கிரீட் இரும்பு கொண்டு கட்டடங்கள் கட்டினால் கனம் அழுந்தி மழையில் சரிந்து புரளும். மண் மேட்டின் அருகில் கீழே எவரும் வீடு கட்டி வசிக்க கூடாது.மண் மேடு மழையில் கரைந்து சரியும் என்ற சாதாரண அறிவு கூட சாமியோவ் சரணம் ஐயப்ப பக்தர்களுக்கு தெரியவில்லை.


Lion Drsekar
ஆக 24, 2024 17:45

இந்த இயற்க்கை பொறுமையாக காத்துக்கொண்டு இருக்கிறது விரைவில் இயற்க்கைக்கு எதிராக செயல்பட்ட படும் எல்லோரும் திருந்த மற்றொரு வாய்ப்பும் கொடுக்கும், பொறுத்திருந்து பார்ப்போம் , மனித நம் திருந்துகிறதா என்று, வந்தே மாதரம்


Venkat.
ஆக 24, 2024 17:34

இதுவரை இந்த நில சரிவு பற்றி பேசிய எவரும் இயற்கைக்கு நாம் செய்த கெடுதல்களை பேசவில்லை ஓட்டுக்காக அனைத்து விதி மீறல்களையும் அனுமதித்து இயற்கையை அழித்து நாமும் அழிந்து போகிறோம்.


D.Ambujavalli
ஆக 24, 2024 16:25

நீலகிரி, கொடைக்கானல் , ஏலகிரி, ஏற்காடு மலைகளுக்கும் இந்த நிலை வர அதிக நாள் ஆகாது கள்ளப்பணம், கருப்பு எல்லாம் கோடிக்கணக்கில் பங்களா, ரிஸார்ட்டுகளாக மாறும்போது மலைகளும் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைக்குப் பழிவாங்கிவிடும்


KRISHNAN R
ஆக 24, 2024 15:58

இந்தியா முழுவதும் இதே நிலை தான்


ஆரூர் ரங்
ஆக 24, 2024 15:26

வெளி-நாட்டுக் காசு வய-நாட்டுக்குக் கேடு. வெளிநாட்டு மார்க்கம்?


TSRSethu
ஆக 24, 2024 14:39

மேற்குத்தொடர்ச்சி மலை முழுவதிலும் இது போன்ற பேராசை கட்டுமானங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இயற்கை தன்னை மீட்டுக்கொள்ளும். மனிதன் தான் அழிவை சந்திக்க போகிறான். எனவே மனிதர்களே காடு மலையை விட்டு சமவெளிக்கு சென்று உங்களையும் உங்கள் சந்ததிகளையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்