உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு எம்.பி., பதவி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு?

வயநாடு எம்.பி., பதவி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு?

புதுடில்லி: வயநாடு லோக்சபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும், உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல், இரண்டிலுமே வெற்றி பெற்றார்.இந்நிலையில் வயநாடு லோக்சபா எம்.பி.,பதவியை ராஜினாமா செய்வது எனவும், உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியை தக்க வைத்துள்வது எனவும் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Venkatasubramanian krishnamurthy
ஜூன் 06, 2024 17:24

உத்தரபிரதேசத்தில் செல்வாக்கு இல்லையென வயநாடு வந்தவர் ஜெயித்தார். அப்போது ஒரு தொகுதி என்பதால் அதிலேயே ஐந்து வருடங்கள் காலம் தள்ளினார். அதே உத்திரப்பிரதேசத்தின் நிலையைக் கண்டு ஒதுங்கியவர் சோனியா. சமாஜ்வாதி கூட்டணி பலம் வந்ததால் ரேபரேலியில் நிற்க சம்மதித்தார் ராகுல். அதுவும் எப்போது? வயநாட்டில் தேர்தல் முடிந்தபிறகு. தென்னகத் தொகுதியை கருவேப்பிலை என நினைக்கும் ராகுலின் இளவரசுத்தனத்தில் ஏமாந்து நிற்கிறார்கள் வயநாடு வாக்காளர்கள்.


Lion Drsekar
ஜூன் 06, 2024 12:15

இவருக்காக மீண்டும் நடத்தவிருக்கும் தேர்தலுக்குண்டான செலவை தேர்தல் கமிஷன் அல்லது இரு இடங்களில் போட்டியிட்ட நபரிடம் வசூலிக்கவேண்டும் . உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து ஜனநாயகத்தைக்காக்க தன்னிச்சையாக முன்வந்தது போல் இதற்கும் ஒரு முடிவு கட்டவேண்டும், இவர்கள் தன்னிச்சையாக போட்டியிடுவார்களாம், மக்கள் வரிப்பணம் பல லட்சம் கோடி செலவு எய்யவேண்டுமாம் . இது எதற்க்காக ? சேஷன் இருந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருப்பார் . பல லட்சம் கோடி மக்கள் இருந்தும் யாருமே வாய் திறக்காமல் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது . வந்தே மாதரம்


Maharajagadai Radhakrishnan
ஜூன் 06, 2024 11:09

நல்ல செய்தி


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 06, 2024 10:14

இது போன்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளில் நின்று ஒரு வேட்பாளர் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஏதாவது ஒரு தொகுதியை மட்டும் வைத்து கொண்டு மற்ற தொகுதியை இராஜினாமா செய்தால் இராஜினாமா செய்த தொகுதியில் இரண்டாம் இடம் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்து அந்த தொகுதி எம்பி பதவியை இரண்டாம் பெற்ற வேட்பாளருக்கு தர வேண்டும். இதனால் மறு தேர்தல் நடத்தும் செலவு குறையும். இதன் மூலம் யாரும் வரும் காலங்களில் இரண்டு தொகுதிகளில் நிற்க மாட்டார்கள். ஏனெனில் எதிர்கட்சி வேட்பாளர் எம்பியாகி விடுவார்கள் என்ற பயம் காரணமாக.


பேசும் தமிழன்
ஜூன் 06, 2024 08:00

மக்களின் வரிபணத்தை வீணடிக்க வேண்டாம் என்று இந்த பப்பு தான் அடுத்தவர்களுக்கு பாடம் எடுத்தது... இப்போது இவரை என்ன சொல்லி மக்கள் திட்ட வேண்டும் ???


பேசும் தமிழன்
ஜூன் 06, 2024 07:58

முதலில் தேர்தல் ஆணையம் ...ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும்.....வெட்டி செலவு .....மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது ....தேவையில்லாத விசயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்கும் நீதிமன்றங்கள் ....இதில் கண்டும் காணாமல் இருப்பது ஏன் ???


vijay , covai
ஜூன் 06, 2024 05:45

உங்களை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு டாடா குட்பை


N Sasikumar Yadhav
ஜூன் 06, 2024 04:13

இதற்கான தேர்தல் செலவை ராகூல்தான் ஏற்கனும் அப்பாவி பொதுமக்களின் வரிப்பணத்தை செலவழிக்க கூடாது . நேரு அவங்க குடும்பத்துக்கு ஆதரவாக இருக்க சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள்


spr
ஜூன் 06, 2024 04:06

"வயநாடு லோக்சபா எம்.பி.,பதவியை ராஜினாமா செய்வது எனவும், உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியை தக்க வைத்துள்வது எனவும் முடிவு" இந்த இடத்திற்கான இடைத் தேர்தலுக்கான செலவை யார் கொடுப்பார்கள் காங்கிரஸ் கட்சி கொடுக்குமா? தேர்தல் ஆணையம் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒருவர் தேர்தலில் நிற்கத் தடை விதிக்க வேண்டும் மோடி அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தாலாவது இதனைச் செய்யலாம் அவரே நிதிஷ் பாபு தயவில் ஆள வேண்டியிருக்கிறது இரண்டு திருடர்களும் கட்சி தாவ நேரம் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்


sankaranarayanan
ஜூன் 06, 2024 00:25

சென்ற தேர்தலில் இவரையும் கட்சியையும் காப்பாற்றிய இந்த வயநாடு தொகுதி என்ன பலி கடாவா புறந்தள்ள இதற்கு தகுந்த பாடம் புகட்டப்படும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை