உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அது முடியாத காரியம்: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு மறுப்பு

அது முடியாத காரியம்: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை30 ல் பெய்த கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கல் மற்றும் சூரல்மலை ஆகிய கிராமங்கள் அழிவைச் சந்தித்தன. 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் ஆக., மாதம் கேரள அரசு மனு அளித்தது.இதற்கு மத்திய அரசு தற்போது பதில் அளித்துள்ளது. இதற்கான கடிதத்தை கேரள மாநில அரசின் டில்லி பிரதிநிதி கே.வி.தாமசிற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் அனுப்பி வைத்து உள்ளார்.அக்கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: முண்டக்கல் மற்றும் சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. சூழ்நிலையை சமாளிப்பதற்கு தேவையான நிதி , கேரளா மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் அதிகமாக உள்ளது. பேரிடரை நிர்வகிப்பதற்கான ஆரம்ப பொறுப்பு மாநில அரசிடமே உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே வழங்கிய நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வதற்கும், மற்ற செலவுகளை மாநில அரசு செய்ய வேண்டும். ஏற்கனவே பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.388 கோடி இரண்டு தவணைகளாக கேரள அரசுக்குவழங்கி உள்ளோம். இவ்வாறு அந்த கடிதத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.தற்போது மாநில அரசிடம் பேரிடர் மேலாண்மை நிதியில் ரூ.394.99 கோடி உள்ளதாக கேரளா கூறியுள்ளது. இதன் மூலம், சூழ்நிலையை சமாளிப்பதற்கு தேவைப்படும் நிதி அம்மாநில அரசிடம் உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

சிவா. தொதநாடு.
நவ 14, 2024 22:57

மத்திய அரசின் நிதியும் உள்ளது மேலும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அனுப்பிய நிவாரணம் பொருட்களும் தொகையும் என்ன ஆனது


venugopal s
நவ 14, 2024 21:15

இது போன்ற அநீதிகளுக்கும் முட்டுக் கொடுக்க மானங்கெட்ட தமிழக சங்கிகளால் மட்டுமே முடியும்!


Sathyanarayanan Sathyasekaren
நவ 14, 2024 21:32

வெட்கமில்லாமல் திருடர்களுக்கு, கொள்ளைக்காரர்களும் முட்டுக்கொடுக்க கொத்தடிமைகள், வேணுகோபால், வைகுண்டேஸ்வரன் போன்றோருக்கே முடியும்.


தாமரை மலர்கிறது
நவ 14, 2024 20:54

வெரி குட். தமிழகத்தை போலவே கேரளாவிடம் போதுமான பேரிடர் நிதி உள்ளது. தேவையான மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு கொடுக்க முடியும். பணம் மரத்தில் காய்க்கவில்லை . அதிக பணம் இருந்தால், இலவசங்களை அள்ளிவீச ஆரம்பித்து விடுவார்கள். அதில் ஏதாவது கமிஷன் அடிக்க முடியுமா என்று சேட்டன்கள் சிந்திப்பார்கள்.


GMM
நவ 14, 2024 20:53

கேரள அரசு என்பதை மாற்றவும். அரசிடம் படைபலம் வேண்டும். கேரள ஸ்டேட் என்று கூறவும். மத்திய அரசு 388 கோடி. மாநில பேரிடர் நிதி 395 கோடி. மாநிலம் அண்டை மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு நாடு முழுவதும் கொடுக்க வேண்டும். நில மேலாண்மை, விற்பனை.. மாநிலம் சார்ந்தது. அதிக நிதி கேட்கும் போது , நில மேலாண்மை தேசிய அளவில் மத்திய அரசின் கீழ் ,ஒருமுகப்படுத்த வேண்டும்.


Jay
நவ 14, 2024 20:44

தேசிய பேரிடர் அப்படி ஒண்ணு இல்லையாமே. அப்புறம் இதை பேரிடர்னு அறிவிப்பாங்க?


ஆரூர் ரங்
நவ 14, 2024 19:43

முறையற்ற வரம்பு மீறிய குடியேற்றம் மற்றும் கட்டுமானங்களால் ஏற்படும் விளைவுகளுக்கு மாநில அரசு மட்டுமே பொறுப்பு. இதையெல்லாம் மத்திய அரசு இழப்பீடு அளித்து ஊக்குவிக்க முடியாது.


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 19:22

இந்திய அரசிடம் 32, 090 கோடி ரூபாய் தேசியப் பேரிடர் நிவாரண நிதியாக கருவூலத்தில் இருக்கிறது. இதற்கும் ஆதாரம் இணையத்தில் உள்ளது. உத்தராகண்ட் 2021 வெள்ளம் பேரிடராம், வயநாடு வெள்ளமும் நிலச்சரிவும் பேரிடர் இல்லையாம். கருணையும் மனிதாபிமானம் இல்லாதவர்களுக்கு , இறைவன் தான் இவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.


அப்பாவி
நவ 14, 2024 19:10

குஜராத்தில் நாலு பேர்,உ.பி ல 10 பேர் செத்தாலே பேரிடர்.மத்த மாநிலங்களுக்கு நஹி.


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 19:06

2021 Uthrakhand flood is d as National disaster. This Wayanad flood is much highest in intensity,. Since t this is in Kerala, bjp is stubborn.


SUBBU,MADURAI
நவ 14, 2024 22:08

floods in Uttarakhand were one of India's worst ever natural disasters.Not a National disaster.


ஆரூர் ரங்
நவ 14, 2024 18:59

இதுவரை எந்த மைய அரசும் தேசீயப் பேரிடர் என அறிவிக்கும் அளவுகோல் விதிகளை ஏற்படுத்தவில்லை. சுனாமி வந்த போதும் கூட. ஆக மக்களை ஏமாற்றி திசை திருப்ப அப்படி அறிவிக்க கோரிக்கை வைக்கிறார்களோ?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை