மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7
பெங்களூரு: “ஒன்றுமே செய்யாத பா.ஜ.,வினர் தேசியவாதிகளா? காங்கிரசார் தான் உண்மையான தேசியவாதிகள். நாங்கள் போராட்டம் நடத்தி, நாட்டுக்கு சுதந்திரம் பெற்ற தந்த பின், பா.ஜ.,வினர் தேசியவாதிகள் என்று கூறிக்கொள்கின்றனர்,” என சட்ட மேலவையில் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ், சட்டமேலவையில் வெவ்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதற்கு பதிலளித்து, முதல்வர் சித்தராமையா நேற்று பேசியதாவது:காங்கிரசார் தான், நாட்டின் சுதந்திரத்திற்காக சிறை சென்றனர். உயிர் தியாகம் செய்தனர். ஆங்கிலேயரிடம் இம்சையை அனுபவித்தனர். பா.ஜ.,வினருக்கு சுதந்திர போராட்ட வரலாறு இல்லை. நாட்டுக்காக போராடிய வரலாறு கிடையாது.ஒன்றுமே செய்யாத பா.ஜ.,வினர் தேசியவாதிகளா? காங்கிரசார் தான் உண்மையான தேசியவாதிகள். நாங்கள் போராட்டம் நடத்தி, நாட்டுக்கு சுதந்திரம் பெற்ற தந்த பின், பா.ஜ.,வினர் தேசியவாதிகள் என்று கூறிக்கொள்கின்றனர்.ஆனால், இந்திய வரலாற்றில் உண்மையான தேசியவாதிகள் யார் என்பது பதிவாகி உள்ளது. கவர்னர் உரையை பொய் என்று சொல்வது சரியா? எங்கள் அரசின் வாக்குறுதி திட்டங்களால், ஏழைகளின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது.மாநிலத்துக்கு வழங்க வேண்டிய வரி பங்கை மத்திய அரசு வழங்கவில்லை. இதை கண்டித்து, டில்லியில் போராட்டம் நடத்தினோம்.இவ்வாறு அவர்பேசினார்.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 7