உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம்

நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: சில நிமிடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே இந்தியாவின் பலம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பீஹார் மாநிலம், கரகாட்டில் ரூ.48,520 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தப் புனித பூமியில், பீஹார் மாநில வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ozln9so6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று கிட்டத்தட்ட ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்குறுதிகள்

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பீஹார் வந்திருந்த போது பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் தரைமட்டமாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு பீஹாருக்கு வந்திருக்கிறேன்.

சில நிமிடங்களில்...!

பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்தை தூள் தூளாக்குவதன் மூலம் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு உள்ளது. சில நிமிடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே இந்தியாவின் பலம்.

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க முயற்சிக்கும் போதெல்லாம், ஆபரேஷன்சிந்தூர் தொடரும். பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும். சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் வலிமையை எதிரிகள் கண்டிருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் நிறுத்தப்படவில்லை. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால், இந்தியா ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நிறைய செஞ்சு இருக்கோம்!

நிகழ்ச்சியில் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் பேசியதாவது: பீஹாரில் நமது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைவதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசு எந்த வேலையும் செய்யவில்லை. முந்தைய அரசு பெண்களுக்கு ஏதாவது செய்ததா? பெண்களுக்காக நாங்கள் நிறைய வேலை செய்துள்ளோம். மின் வசதி, குடிநீர் வசதி 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பீஹாரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மின் வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படும். பீஹார் மாநில வளர்ச்சிக்காக பிரதமர் மோடி இவ்வளவு சிறப்பாக பணியாற்றி வருகிறார். மத்திய அரசு சமீபத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.பிரதமர் மோடி 'ரோடுஷோ'முன்னதாக, பீஹார் மாநிலம், கரகாட்டில் பிரதமர் மோடி ரோடுஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட மக்கள் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். மக்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

SENTHIL NATHAN
மே 31, 2025 12:08

ஃபேக்கு ஐடியில் நடுநிலை கதறல் சூப்பர்


துர்வேஷ் சகாதேவன்
மே 30, 2025 17:56

அதுவும் அவர்கள் இடத்தில சொல்லி விட்டு தாக்குதல் அருமை


கொங்கு தமிழன் பிரசாந்த்
மே 30, 2025 15:27

அப்பாவி மக்கள் மீது துளிகூட இரக்கம் காட்டாமல் சூட்டு கொன்ற தீவிரவாதிகள் இன்னும் எங்கோ சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால் நீங்கள் நாம் ஜெய்துவிட்டோம் என்று சொல்வது பற்றி நினைக்கும்போது நெஞ்சு வலிக்கிறது. மக்களை உங்கள் அரசியலுக்காக திசைதிருபாதீர்கள்.


vivek
மே 30, 2025 16:38

மாங்காய் தமிழா...இங்கே அந்த சாரை கண்டுபிடிக்க வக்கில்லை...


ஆரூர் ரங்
மே 30, 2025 17:06

ராஜிவ் காந்தியைக் கொன்ற பயங்கரவாதிக்கு விருந்தளித்த கும்பல் யார்?. தாகி, ராமஜெயம் படுகொலை நிகழ்ந்து எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஏன்?.


Sudha
மே 30, 2025 14:28

முப்படை தளபதி களுக்கும் தலைமை தளபதிக்கும் பாரத் ரத்னா அறிவியுங்கள்


Ramona
மே 30, 2025 13:48

முழுவதுமாக அழிக்காமல், விட்ட குறை திட்ட குறை போல செய்துவிட்டீர்கள் அதுதான் மிகுந்த வருத்தமாக இருக்கிறது.


புதிய வீடியோ