உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - ம.ஜ.த.,வின் நிரந்தர கூட்டணியால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,

பா.ஜ., - ம.ஜ.த.,வின் நிரந்தர கூட்டணியால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,

பெங்களூரு: ''பா.ஜ., - ம.ஜ.த.,வின் நிரந்தர கூட்டணியால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.கர்நாடகா மேலவை தேர்தலிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. பா.ஜ., ஐந்து இடத்திலும்; ம.ஜ.த., ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.இது தொடர்பாக பெங்களூரில் நேற்று சிவகுமார் அளித்த பேட்டி:பா.ஜ., - ம.ஜ.த.,வின் நிரந்தர கூட்டணியால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மத்தியில் 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று நினைக்கிறேன். பா.ஜ.,வினர் ஆட்சி செய்ய முடியாது. இந்தியாவை 'இண்டியா' கூட்டணி தான் ஆட்சி செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.பிரஜ்வல் ரேவண்ணா வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைப்பது குறித்து கேட்டபோது, 'அதை பற்றி பேசினால் நேரமாகும். சில நாட்கள் அதை பற்றி பேசாமல் இருக்கலாமே' என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ