அமைதி காக்க வேண்டும்!
நேபாள விவகாரத்தில் நான் கருத்து சொல்ல முடியாது. அது அந்நாட்டின் உள்விவகாரம். இது குறித்து மத்திய அரசு வேண்டுமானால் கருத்து தெரிவிக்கலாம். நேபாள எல்லையில் உள்ள சிலிகுரி, கலிம்போங் உள்ளிட்ட பகுதி மக்கள் அமைதி காக்க வேண்டும். எந்தவொரு அசம்பாவிதத்திலும் ஈடுபட வேண்டாம். - மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்., திரும்ப பெற வேண்டும்!
மராத்தா சமூகத்தினருக்கு, 'குன்பி' ஜாதி சா ன்றிதழ் வழங்குவதற்கான தீர்மானத்தை மஹாராஷ்டிர அரசு திரும்ப பெற வேண்டும் அல்லது திருத்தி வெளியிட வேண்டும். மாநி லத்தில், 350 சமூகங்களை உள்ளடக்கிய இதர பிற் படுத்தப்பட்ட பிரிவினரின் இட ஒதுக்கீட்டை, இந்த தீர்மானம் எந்த வகையிலு ம் நீர்த்து போகச் செய்யக்கூடாது. - சகன் புஜ்பால், மஹாராஷ்டிர அமைச்சர், தேசியவாத காங்.,
நடவடிக்கை எடுங்க!
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் மசூதி கல்வெட்டில் இடம் பெற்ற அசோகா சின்னம் சேதப்படுத்தப்பட்டது, மிகவும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்டோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் கவுரவத்துடன், யாரும் எந்த வடிவிலும் விளையாட முடியாது. -சத் சர்மா ஜம்மு- - காஷ்மீர் பா.ஜ., தலைவர்