உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் செய்த பாவங்கள்: பிரதமர் மோடி பட்டியல்

காங்கிரஸ் செய்த பாவங்கள்: பிரதமர் மோடி பட்டியல்

புதுடில்லி: அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த பாவங்கள் எனக்கூறி பிரதமர் மோடி பட்டியல் வெளியிட்டு உள்ளார்.அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பார்லிமென்டில் விவாதம் நடந்தது. இதில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, பார்லிமென்டில் அமளியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டன.

தந்திரங்கள்

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பல ஆண்டுகளாக செய்த தவறுகளை குறிப்பாக அம்பேத்கரை அவமதித்ததை பொய்களால் மறைக்க முடியும் என நினைத்தால், அது மிகப்பெரிய தவறு. அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், எஸ்சி/எஸ்டி மக்களை அவமானப்படுத்தவும், வாரிசு அரசியல்வாதிகள் தலைமையிலான கட்சி எப்படி அனைத்துவிதமான தந்திரங்களிலும் ஈடுபட்டது என்பதை மக்கள் பார்த்து உள்ளனர்.

பாவங்கள்

அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த பாவங்களின் பட்டியல் பின்வருமாறு* தேர்தலில் ஒரு முறை அல்ல இரண்டு முறை அவரை தோற்கடித்தது.* அவருக்கு எதிராக நேரு பிரசாரம் செய்ததுடன், அவரை தோல்வியடைய செய்வதை கவுரவ பிரச்னையாக கருதினார்.* பாரத ரத்னா விருது வழங்க மறுத்தது. * பெருமைக்குரிய பார்லிமென்ட் மைய மண்டபத்தில் அவரின் புகைப்படம் இடம்பெறுவதை தடுத்தது

கறுப்பு வரலாறு

எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு எதிராக காங்கிரஸ் ஆட்சியில் செய்த அட்டூழியங்களை அக்கட்சியால் மறுக்க முடியாது. பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும் அச்சமுதாயத்தினர் அதிகாரம் கிடைக்க அக்கட்சி எதுவும் செய்யவில்லை. அம்பேத்கரை அவமானப்படுத்துத் மற்றும் எஸ்சி/ எஸ்டி சமூகத்தினரை புறக்கணித்த காங்கிரசின் கறுப்பு வரலாற்றை பார்லிமென்டில் அமித்ஷா அம்பலப்படுத்தினார். இந்த உண்மைகளால், காங்கிரஸ் திகைத்து நிற்கிறார்கள். அதனால் தான் தற்போது நாடகங்களில் அக்கட்சி ஈடுபடுகிறது. மக்களுக்கு அனைத்து உண்மை தெரியும்.

மரியாதை

அம்பேத்கர் காரணமாக நாங்கள் இங்கு இருக்கிறோம். அவரின் கொள்கைகளை நிறைவேற்ற கடந்த 10 ஆண்டுகளில் எங்களது அரசு அயராது பாடுபடுகிறது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து அகற்றுவது, எஸ்சி/எஸ்டி சட்டத்தை பலப்படுத்தியது, தூய்மை இந்தியா திட்டம், பிரதமர் அவாஸ் யோஜனா, ஜல்ஜீவன் இயக்கம், உஜ்வாலா யோஜனா என ஒவ்வொன்றும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தி உள்ளனர்.அம்பேத்கர் தொடர்புடைய ஐந்து இடங்களை மேம்படுத்த பா.ஜ., அரசு பணியாற்றுகிறது. அம்பேத்கர் அடக்கம் செய்யப்பட்ட நிலம் தொடர்பாக இருந்த பிரச்னையை தீர்த்து வைத்தோம். அவர் கடைசி காலத்தை கழித்த டில்லியின் அலிப்பூர் சாலையில் உள்ள பகுதியை மேம்படுத்தினோம். லண்டனில் அவர் வசித்த வீட்டை இந்திய அரசு வாங்கி உள்ளது. அம்பேத்கர் என வரும்போது, எங்களின் மரியாதையும், மதிப்பும் உயர்வானது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
டிச 18, 2024 22:18

பத்து வருடங்களாக உருப்படியாக எந்த வேலையையும் பார்க்காமல் இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்!


என்றும் இந்தியன்
டிச 18, 2024 17:47

மேலே சொன்னதை பார்த்தால் அப்போதே அம்பேத்கரை பிஜேபி மாதிரியே Treat செய்தது போல இருக்கின்றது இந்த முஸ்லீம் நேரு காங்கிரஸ்


C.SRIRAM
டிச 18, 2024 17:12

அமைச்சர் சொன்னதில் ஏதும் தவறு இல்லையே.ஏன் நேத்து ஆரம்பித்த கட்சிக்காரனெல்லாம் கூவுகிறார்கள் ?. அம்பேகர் சொன்ன ஐடா துக்கேடு குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே என்பதை இந்த கூவும் கூமுட்டைகள் பின் பற்றவில்லை .


அப்பாவி
டிச 18, 2024 16:42

அம்பேத்கார் ஒண்ணும் அது புத்திசாலி அல்ல. பிரிட்டுஷ் பார்லிமெண்ட் முறையை காப்பியடிச்சு இந்தியாவுக்கு ஏத்த மாதிரி ரெடி பப்ணினாரு. அதில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது.


Sampath Kumar
டிச 18, 2024 16:13

பொய் பொய் முழு பூசணிக்காய் சோற்றில் புதைக்கின்றார் உங்க கும்பலின் அட்ராசிட்டி அனுபவித்தவர் அவர்தான் அதன் விளைவாக தான் அவர் மதம் மாறினார் அந்த அளவுக்கு உங்க ஹிந்துத்துவ அவரை இம்சித்தத்து அதை எல்லாம் மறைத்து காங்கிரஸ் மேல் பழி சொல்வதை கடைந்து ஏடுத்த அய்யோக்கியத்தனம்


ஆரூர் ரங்
டிச 18, 2024 17:19

பீமராவ் தன்னை உருவாக்கிய ஆசிரியரின் பெயரான அம்பேத்கார் என்பதையே தன்னுடைய பெயருடன் இணைத்துக் கொண்டார். அந்த ஆசிரியர் ஒரு பிராமணர். என்ன சொல்ல வந்தீங்க?.


Sidharth
டிச 18, 2024 13:58

என்ன ஒரு அதிசயம்


வைகுண்டேஸ்வரன் V, chennai
டிச 18, 2024 14:09

சித்தார்த் 200 ரூவா ஊஃபீஸ்க்கு எல்லாமே அதிசயம்தான்.


Barakat Ali
டிச 18, 2024 13:49

அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவினார் ..... இன்னமும் கூட அவரை ரோல் மாடலாகக் கொண்டவர்கள் பலர் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள் ..... அது வெறும் நாத்திக மதம் என்று அவர் மட்டுமல்ல அடங்கமறு , அத்துமீறு பேசுபவர்களும் நம்புகிறார்கள் ..... இந்தியா முழுவதும் அவர் சொன்ன நாத்திகத்தை மட்டும் பிடித்துத் தொங்குகிறார்கள் ..... புலனடக்கம் தேவையென்று சொல்லியிருக்கிறார் .... பெண்ணாசை கூடாதென்றும் சொல்லியிருக்கிறார் .....


சமீபத்திய செய்தி