உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாடட்டத்தின்போது 15 பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டத்திற்குள் வேன் புகுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த வேனை ஓட்டி வந்த ஷம்சுத் டின் ஜாபர் என்பவர் ராணுவ வீரர் என்பதும், வாகனத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் கொடி கட்டி இருந்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு வன்மையான கண்டனம் தெரிவிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் நினைவாக நமது எண்ணங்களும் பிரார்த்தனையும்உள்ளன. இந்த சோகத்தில் இருந்து மீண்டு வலமையும் ஆறுதலையும் பெறட்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N Sasikumar Yadhav
ஜன 02, 2025 23:33

உலகின் அமைதிக்கு இசுலாமிய பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது உலக நாடுகள் இணைந்து இசுலாமிய பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டும்


spr
ஜன 02, 2025 23:01

நம்ம வீடே நாறுதாம் இதிலே அடுத்த வுட்டுப் பிரச்சினை அவசியமா இதைத்தானே வேண்டாம் பெரிய மனுஷத்தனம் இல்லேன்னு, "பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு" அப்படின்னு திருவள்ளுவர் சொன்னார். "பிறன் மனை" என்றால் அடுத்தவனது வீடு என்றும் பொருள் கொள்ளலாம் வள்ளுவர் ஒட்டு மொத்தமாக அடுத்தவன் வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்காமல் இருப்பது பேராண்மை மட்டுமல்ல அதுவே அறநெறிப்படி வாழும் ஒழுக்கமான வாழ்க்கை என்கிறார் "பிறன் மனை" என்பதில் பிறர் மனைவியும் அடக்கம் அடுத்தவன் வீட்டைப் பார்த்தால்தான் அவன் மனைவியையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது நம்ம தலைவர்களுக்கு புரியவில்லையா இல்லே அவன் சொல்றானே நாமும் சொல்வோம்ன்னு எண்ணமா


RAMAKRISHNAN NATESAN
ஜன 02, 2025 19:21

எண்ணி ரெண்டே மாசத்துக்குள்ள அவனோட கும்பல், குடும்பம், குஞ்சு-குளுவான் மொத்தத்தையும் FBI சட்டத்தின் முன்பு நிறுத்தும் .... நம்ம நாட்ல அப்படியா ? சரி .. சரி ... கண்டிச்சோமா, உறவை பலப்படுத்தினோமா ன்னு இருக்கத்தான் கண்டிச்சீங்கன்னா ஓகே ஓகே .....


SUBBU,MADURAI
ஜன 02, 2025 19:16

During Christmas eve there were two major attacks by white lovers Islamists both in Germany and USA. But these white supremacists will hate brown hindus who remain largely peaceful around the world!


முக்கிய வீடியோ