சாதகமான உறவை விரும்புகிறோம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பதில்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டுள்ள மனநிலையை போலவே இந்தியாவும், அமெரிக்கா உடன் சாதகமான உறவை விரும்புகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.''பிரதமர் மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான். மோடி சிறந்த பிரதமர். இந்தியா- அமரிக்கா உறவுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை'' என அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை:அதிபர் டிரம்பின் கருத்தை வரவேற்கிறேன். இந்தியா உடனான உறவு குறித்து சாதகமான மனநிலையை வெளிப்படுத்திய அதிபர் டிரம்பை பாராட்டுகிறேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டுள்ள மனநிலையை போலவே இந்தியாவும், அமெரிக்கா உடன் சாதகமான உறவை விரும்புகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.