உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி

ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: '' நாட்டின் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களுக்கு ஊடுருவல்காரர்கள் அச்சுறுத்தலாக மாறி உள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பீஹார் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த பணிகளையும் துவக்கி வைத்தார். பல்வேறு ரயில் திட்டங்களையும் துவக்கி வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vk5aaivs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நெருக்கடி

இதன் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரசும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், பீஹாரின் பெருமைக்கு மட்டும் அல்லாமல், பீஹாரின் அடையாளத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இன்று இந்தியாவின் கிழக்கு மற்றும் சீமாஞ்சல் பகுதிகளில், சட்டவிரோத ஊடுருவல் காரணமாக பெரிய மக்கள் தொகை நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பீஹார், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட பல மாநில மக்கள், தங்களின் சகோதரிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதனால் தான், மக்கள் தொகை இயக்கம் குறித்து செங்கோட்டையில் இருந்து அறிவித்தேன். ஆனால், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் ஊடுருவலை ஆதரித்து வருகின்றன. அவர்களை பாதுகாப்பதுடன், வெட்கம் இல்லாமல் அவர்களுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி , பாத யாத்திரை நடத்துகின்றனர். அவர்கள், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த விரும்புகின்றனர். ஊடுருவல்காரர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும். ஊடுருவலை நிறுத்துவது தேஜ கூட்டணியின் கடமை. இதனை காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் தெளிவாக கேட்டுக் கொள்ள வேண்டும்.

வாக்குறுதி

ஊடுருவல்காரர்களை பாதுகாப்பவர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் சவால் விடுகிறேன். நீங்கள் அவர்களை பாதுகாக்க எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்களை வெளியேற்ற தொடர்ந்து பணியாற்றுவோம். இது மோடியின் வாக்குறுதி. ஊடுருவல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதன் பலன்களை நீங்கள் பார்ப்பீர்கள். காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் எழுப்பும் ஊடுருவலுக்கு ஆதரவாக எழுப்பும் பிரச்னைகளுக்கு உரிய பதிலடி தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

லட்சாதிபதிகள்

அவ்விரு கட்சிகளும் கடந்த10 ஆண்டுகளாக பதவியில் இல்லை. இதற்கு பீஹாரின் தாயார்கள் மற்றும் சகோதரிகளே காரணம். அவர்களுக்கு எனது சிறப்பு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியின் போது, கொலை, பலாத்காரம் மற்றும் வன்முறைக்கு பீஹாரைச் சேர்ந்த தாய்மார்களும், சகோதரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இரட்டை இன்ஜின் நிர்வாகத்தில் பெண்கள் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Venugopal S
செப் 16, 2025 11:14

பத்து ஆண்டுகளாக இதையே தான் பேசிக்கொண்டு இருக்கிறோம், ஆனால் ஒன்றும் செய்ய மாட்டோம்!


Kasimani Baskaran
செப் 16, 2025 04:10

சட்டப்படி இந்தியர்கள் அல்லாதவர்கள் ஓட்டுப்போட முடியாது. காங்கிரஸ் தலைமையே குடியுரிமை இல்லாமல் கள்ள ஒட்டு போட்டு புகழ்பெற்றது. இதுகளுக்கெல்லாம் தீர்வு வேண்டும் என்றால் வெளியேற்றத்தான் வேண்டும்.


Alphonse Mariaa
செப் 16, 2025 00:24

திராவிட பாணம் குடிக்க வில்லையா


Barakat Ali
செப் 15, 2025 22:37

பதினோரு வருசமா என்ன பண்ணிட்டு இருந்தீங்க ????


Pandi Muni
செப் 15, 2025 21:21

முதலில் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியுள்ள திராவிடர்களை வெளியேற்றுங்கள்


K.n. Dhasarathan
செப் 15, 2025 21:18

பிரதமரே யாரை சொல்கிறீர்கள் ? தேர்தல் ஆணையத்தையா ? நிறைய பொய் ஜே பி காரர்கள் ஊடுருவி விட்டார்கள், உண்மையான வோட்டர்கல் நீக்கப்பட்டு விட்டார்கள், உங்கள் ஆசியோடுதானே இந்த ஆட்சியே மினாரிட்டி ஆட்சி தானே எப்படியாவது மஜுரிட்டி வாங்கணும் என்றால் முடியாது, மக்களுக்கு வேலை செய்துதான் வாங்க முடியும்.


ராஜா
செப் 15, 2025 20:47

முதலில் கைபர் கணவாய் வழியே வந்த கயவர்களை எல்லாம் விரட்டி விட்டு பிறகு மற்ற மக்களை பார்க்க வேண்டும்.


Kumar Kumzi
செப் 15, 2025 22:37

உன்னை போன்ற வந்தேறிகளை துரத்தியடிக்க வேண்டும்


Kasimani Baskaran
செப் 16, 2025 04:08

திராவிடனை விரட்டவேண்டாம்...


Tamilan
செப் 15, 2025 20:14

அதைத்தான் தமிழக அரசு, திராவிட இயக்கங்கள் செய்துகொண்டிருக்கின்றன .


Nathansamwi
செப் 15, 2025 20:07

அப்போ இவ்ளோ நாளா ஊடுருவனபோ என்ன பன்னிட்டு இருந்திங்க ஜி ... எலக்ஷன் வந்தா தான் தடுப்பிங்க போல ?


GMM
செப் 15, 2025 19:59

பிகாரில் ஊடுருவல்காரர்களை காண தேர்தல் ஆணைய சிறப்பு பட்டியல் உதவியது. நீதிபதி ஆதார் ஆவணம் என்கிறார். போலி ஆதார், பட்டியலில் தவறு நிகழ செய்யும். தோற்கும் கட்சிகள் தேர்தல் முடிவை ஏற்காது. போலி வாக்காளர்கள் விவரம் ராகுல் கையில் இருக்கும். காங்கிரஸ் பல புரளியை பரப்பும். அரசியல் சாசன, மத்திய விசாரணை அமைப்புகள், நிர்வாக உயர் அதிகாரிகள் மீது நீதிபதிகள் நேரடி ஆதிக்கம் தடுத்தால் தான் ஊடுருவல் காரர்கள் வெளியேற்ற முடியும். தேர்தல் நடத்த முடியும். அரசியல் சாசனத்தை நீதிபதி மீறினால் தடுக்க ஆணையம் தேவை.


புதிய வீடியோ