உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவோம்; அமித்ஷா திட்டவட்டம்

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவோம்; அமித்ஷா திட்டவட்டம்

புதுடில்லி: ''அனைத்து நக்சல்களும் சரணடையும் வரையும், ஒழிக்கப்படும் வரையும் பாஜ அரசு ஓயாது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சபதம் விடுத்துள்ளார்.சத்தீஸ்கரில் உள்ள கர்ரேகுட்டா மலையில் 'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் சத்தீஸ்கர் மாநில போலீசாரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டினார். இது குறித்து அமித்ஷா கூறியதாவது: அனைத்து நக்சல்களும் சரணடையும் வரையும், ஒழிக்கப்படும் வரையும் பாஜ அரசு ஓயாது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=myoig9mt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினர் காட்டிய துணிச்சலும், வீரமும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் ஒரு பொன் அத்தியாயமாக நினைவுகூரப்படும். ஒவ்வொரு மலை பகுதிகளிலும் நக்சலைட்டுகள் ஐஇடி வகை குண்டுகளை மறைத்து வைத்திருந்த போதும், பாதுகாப்புப் படையினர் அதிக மன உறுதியுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு பெரிய நக்சல் முகாம்களை வெற்றிகரமாக அழித்தனர். கரேகுட்டா மலையில் நக்சல்கள் பதுங்கி இருந்த இடத்தை பாதுாப்பு படையினர் துல்லியமாக அழித்தனர். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை நக்சலைட்டுகள் சீர்குலைத்தனர். அரசு நலத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தனர்.நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பலத்த காயமடைந்த பாதுகாப்புப் பணியாளர்களை ஆதரிக்கவும், அவர்களின் வாழ்க்கை எளிதாக்கப்படுவதை உறுதி செய்யவும் பாஜ அரசு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கும். 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார். சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் மற்றும் துணை முதல்வர் விஜய் சர்மா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

R.RAMACHANDRAN
செப் 04, 2025 09:21

இந்த நாட்டில் நக்சல்கள் தீவிர வாதிகள் உருவாவதற்கு காரணம் அரசாங்கத்தின் மூன்று அங்கங்கள் இந்திய அரசமைப்புப்படி செயல்படாமல் காட்டுமிராண்டித் தனமாக செய்யப்படுவதால் தான்.அவர்கள் உரிமைகளுக்காக போராடுபவர்களை எல்லாம் நக்சல்கள் தீவிர வாதிகள் என இட்டுக்கட்டி அழித்துவிட்டு உண்மை குற்றவாளிகள் சுதந்திரமாக செயல்பட ஏற்பாடுகள் செய்கின்றனர்.


அப்பாவி
செப் 03, 2025 22:31

ரஷியாவும், சீனாவும் சேந்து நாட்டை கம்யூனிஸ்ட் நாடாக மாற்றப் போகுது. உஷாராயிருங்க.


K.n. Dhasarathan
செப் 03, 2025 21:27

இந்த மடை மாற்றும் விபரம் நமக்கு வேண்டாம் உள்துறை அமைச்சரே அமெரிக்காவின் பொருளாதார தடையை எப்படி சந்திப்பது ? நமது பக்கம் எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ? இதுவரை என்ன செய்யப்பட்டிருக்கு ? நிதி அமைச்சர் என்ன செய்கிறார் ? ரேசெர்வே வாங்கி கவர்னர் என்ன செய்கிறார் ? வேலை இழப்புகளுக்கு என்ன செய்யபோகிறீர்கள் ? வேற்று நாட்டு மார்க்கெட்டிங் மக்களை பார்த்தீர்களா ? அல்லது உள்ளுரிலே உருட்டிக்கொண்டு இருக்கிறீர்களா?


Tamilan
செப் 03, 2025 21:11

இந்துமதவாத நக்சல்கள் மட்டுமே இருக்கவேண்டுமா?


Barakat Ali
செப் 03, 2025 21:35

எந்த மதவாத தீவிரவாதமும் ஆபத்தானதே ....... உலகம் ஒன்றிணைந்து மத அடிப்படைவாத தீவிரவாதத்தை புல், பூண்டு கூட மிஞ்சாத அளவுக்கு ஒடுக்க வேண்டும் ....


N Sasikumar Yadhav
செப் 03, 2025 21:47

உலகின் அமைதியை கெடுக்கிற மதவாதம் அமைதிமார்க்கம் என ஃபீலா விடுகிற பயங்கரவாத இஸ்லாம் மட்டுமே . இந்துமதவாதம் இருந்திருந்தால் பாரதத்தில் பாலைவன மதங்களே இருந்திருக்காது பாகிஸ்தான் மாதிரி தினமும் தீபாவளி நடந்திருக்கும் திருட்வாளர் டுமிலன் அவுர்களே


Rathna
செப் 03, 2025 20:04

60 ஆண்டுகள் நடத்திய அரசாங்கம் அளித்த பரிசு - உள்நாட்டு தீவிரவாதம் - உண்டியல் குலுக்கிகள், அர்பன் நக்ஸல்ஸ், மற்றும் உள்நாட்டு நக்ஸல். இதை பயன்படுத்தி அடித்த கொள்ளை எவ்வளவோ?? வெளிநாட்டு தீவிரவாதம் பாகிஸ்தானிடம் அடிபணிந்து ஒவ்வொரு தீவிரவாத செயலுக்கு பின்னால் பிரியாணி சாப்பிட்டு கடிதம் அனுப்பியது மட்டுமே.


Chandradas Appavoo
செப் 03, 2025 18:39

RSS என்றால் என்ன என்று தெரியாத நீ அதை குறை கூறுகிறாய்


T.sthivinayagam
செப் 03, 2025 18:00

அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் நவரோ குறிப்பிட்ட இந்தியர்களிடம் இருந்து முதலில் இந்திய மக்களை பிரதமரும் உள் துறை அமைச்சரும் அவர்களும் காப்பாற்றுங்கள் என்று மக்கள் கூறுகின்றனர்


vivek
செப் 03, 2025 18:41

உமக்கு சொந்த மூளை இருக்கா என்று மக்கள் கேட்கிறார்கள்


V Venkatachalam
செப் 03, 2025 18:55

மக்கள் ன்னு சொல்றது யாரு? திருட்டு களவாணிங்க தானே? அவன்களும் அவன்களுக்கு முட்டு குடுக்குறவன்களும் அப்புடி தானே பேசுவானுங்க. மோடி ஒயிக கூட்டம் தானே. இந்த களவாணிங்களை பெண்டு எடுத்தால் தான் சரியா வருவானுங்க.


V Venkatachalam
செப் 03, 2025 17:01

கான்+ கிராஸ், காம்ரேட்ஸ் மற்றும் திருட்டு தீயமுக வை ஒழித்து கட்டினால் மட்டுமே இந்தியா நக்சல் இல்லாத நாடுன்னு அறிவிச்சுடலாம். மலையில் குகையில் மற்றும் காட்டுக்குள் ஒளிந்திருக்கும் நக்ஸல்களை யெல்லாம் விட நம்முடனேயே நடமாடிக் கொண்டிருக்கும் நக்ஸல்களை தீர்த்து கட்டணும்.அவன்கள் தங்களை நக்ஸல்களாகவே காட்டிக் கொள்வார்கள்.ஆகவே அவன்களை நம்பலாம்.‌நம்முடனேயே போலி வேஷம் போடும் நக்ஸல்களை நாம் கண்டறிந்து பட்டப்பகலில் சுட்டுத்தள்ளணும்.


Ramesh Sargam
செப் 03, 2025 15:40

முதலில் இந்தியாவை தேச துரோகிகள் இல்லாத நாடாக மாற்றவேண்டும். அப்படி மாற்றினால் பிறகு எல்லாம் சரியாகிவிடும்.


Ramanujadasan
செப் 03, 2025 15:25

கொஞ்சம் கூட மூளையை பயன்படுத்தாமல் உளறப்பட்ட கருத்து கருமம்


Ramanujadasan
செப் 03, 2025 15:59

இந்த கருத்தை ஓவிய விஜயின் கருத்துக்கு பதிலாக கருதவும்


புதிய வீடியோ