உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கமல் படங்களை வெளியிட மாட்டோம்: கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அதிரடி

கமல் படங்களை வெளியிட மாட்டோம்: கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அதிரடி

பெங்களூரு : 'கமல் மன்னிப்பு கேட்கும் வரை, அவரது திரைப்படங்களை வெளியிட மாட்டோம்' என, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.நடிகர் கமல், 'தமிழில் இருந்து கன்னடம் உருவானது' என தெரிவித்த கருத்து, கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையாவும் இதை கண்டித்தார். தன் பேச்சுக்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், 'மன்னிப்பு கேட்க மாட்டேன்' என்று கமல் கூறி உள்ளார். இந்நிலையில், பெங்களூரில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன், கர்நாடக ரக் ஷன வேதிகே அமைப்பினர் நேற்று காலை போராட்டம் நடத்தினர். திடீரென வர்த்தக சபைக்குள் நுழைந்தனர். அங்கு கூட்டம் நடந்த இடத்திற்கு சென்று, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 'கமல் திரைப்படத்தை வெளியிடக் கூடாது' என்று கோஷம் எழுப்பினர். வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு, முன்னாள் தலைவர் சா.ரா.கோவிந்திடம் மனு கொடுத்தனர். இதையடுத்து, 'கமல் மன்னிப்பு கேட்கும் வரை, அவரது திரைப்படங்கள் இங்கு திரையிடப்படாது' என்று, நரசிம்மலு அறிவித்தார். ஆனால், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., நடிகை ரம்யா மட்டும் கமலுக்கு ஆதரவாக, 'இன்ஸ்டாகிராமில்' ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், 'கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய அனைத்தும் திராவிட மொழிகளின் ஒரே குடையில் வருகின்றன. நமக்கு சில பொதுவான தன்மைகளும், மொழி வம்சாவளியும் இருக்கலாம். நாம் அனைவரும் திராவிடர்கள். 'கமல் பேசியதற்காக அவரது திரைப்படங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்பு என்பது கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா. ஹிந்தி திணிப்புக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும். அதற்கு முதலில் நாம் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை வைத்திருக்க வேண்டும்' என, பதிவிட்டு உள்ளார்.

நான் கமல் ரசிகன்: சிவராஜ்குமார் உருக்கம்

தனியார் நிகழ்ச்சியில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது: நான் கமலின் தீவிர ரசிகன். அவர், எப்போதும் எனக்கு ஊக்கமாக இருந்து உள்ளார். கர்நாடகாவை பற்றி பெருமையாக என்னிடம் நிறைய முறை பேசி உள்ளார். தக் லைப் இசை நிகழ்ச்சியில் என் குடும்பத்தை பற்றி அவர் பெருமையாக பேசியதை தான் அனைவரும் பேசி இருக்க வேண்டும்.அதை விட்டுவிட்டு கன்னட மொழி பற்றி அவர் பேசியதை அனைவரும் பேசுகிறீர்கள். அவர் நடித்த பட விழாவுக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்தது பெருமையான விஷயம். யாராவது ஒருவர் கன்னடத்தை பற்றி பேசினால் மட்டும் கன்னடம் மீதான உங்கள் பாசத்தை வெளிப்படுத்துகிறீர்கள். இந்த பாசம் எப்போதும் இருக்க வேண்டும். கன்னடத்திற்காக அனைவரும் ஒருங்கிணைந்து போராடுவோம். தேவைப்பட்டால் என் உயிரையும் கொடுப்பேன். கமல், கன்னட சினிமாவுக்கு நிறைய செய்து இருக்கிறார். எப்போதும் அனைவரையும் மதிக்கக்கூடிய நல்ல திரைக்கலைஞர். எந்த மொழியையும் தவறாக சித்தரிக்க நினைக்க மாட்டார். என் மீது உள்ள பாசத்தில் அவர் ஏதோ பேசப்போக அது தவறாகி விட்டது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Senthoora
ஜூன் 02, 2025 18:14

இங்கே கமலை கேவலப்படுத்துவது என்று, தமிழனாய் பிறந்து தமிழை கேவலப்படுத்தி, தமிழை கன்னட மொழிக்கு அடமானம் வைத்துவிட்டார்கள், சிலர். தமிழ் பழமை மொழிதான் அதில் மாற்று கருத்து இல்லை. ஒரு படம் ஓடணும் என்பதுக்காக தமிழை அடமானம் வைக்க கமல் விரும்பவில்லை. காமல் மன்னிப்பு கேடிருந்தால், உடனே தமிழை மதிக்கவில்லை, கன்னட மொழிக்கு அடகுவைத்து படம் ஓட்டுக்கிறார் என்று இதே சிலர் கும்மி அடிப்பார்கள்.


K V Ramadoss
மே 31, 2025 14:00

சே உங்கள் மதி இவ்வளவுதானா? உங்களைப்பற்றிய மதிப்பீட்டில் உங்கள் நடத்தையே உங்களை தாழ்த்துகிறது.


sankaranarayanan
மே 30, 2025 19:13

கலைஞர் சொல்லியதுபோன்று கூடா நட்பு கேடாக விளைந்தது இப்போ திராவிட மாடல் அரசை புகழ்வதற்காக எடுத்து தோல்வி முயற்சி எடுத்த எடுப்பிலே வாக்குவாதம் எதிர்ப்பு இவர் ராஜ்ய சபா சென்று பேச ஆரம்பித்தாலே கன்னட எம்பிக்கள் ஒன்றாக கலாட்டா செய்வார்கள் இவரை பேசவே விட மாட்டார்கள். ஆதலால் இப்போது இங்கேயே இன்றே மன்னிப்பு கேட்பதில் எந்த தவறும் இல்லை அதுதான் பெருந்தன்மை இல்லையேல் இது முடிவு பெறாமல் பகைமையை பன்மடங்காக்கும். எச்சரிக்கை!


Baskar
மே 30, 2025 18:21

நாட்டை கெடுப்பதற்கே நெறைய பேர் கிளம்பிட்டாங்க


arumugam mathavan
மே 30, 2025 15:52

கமல் எப்பவும் பிறந்த இனத்தை அசிங்கப்படுத்தி பேசுவார் , இப்ப தேவையே இல்லாமல் இவருடைய படவிளம்பரத்திற்கு தமிழை இழுத்து கண்ணடத்தோட தமிழகத்தை சண்டைக்கு போக சொல்லாறார் ..இந்த சுயநலவாதிகள் ஓழியும் வரை திரையுலகம் முன்னேறாது


M S RAGHUNATHAN
மே 30, 2025 15:50

அதுதான் புரட்சி தமிழன் மானமிகு தமிழன் சத்யராஜ் வழி காட்டி இருக்கிறாரே பாகுபலி 2 படம். அதுபோல் ஒரு மன்னிப்பை அறிவித்துவிடலாம். இல்லையென்றால் மணி ரத்தினம் பாவம். சிம்பு பாவம். மேலும் க மல ஹாசன் ராஜ்ய சபாவில் பேச ஆரம்பித்தால் கர்நாடகாவை சேர்ந்த உறுப்பினர்கள் ரகளை செய்வார்கள்.


மூர்க்கன்
மே 30, 2025 15:05

மண்ணை வாரி போட்டாலும் அது யானை??


Anand
மே 30, 2025 14:21

தானே மண்ணை வாரி தலையில் போட்டு கிச்சு


ram
மே 30, 2025 13:05

இந்த கூத்தாடிக்கு என்ன போச்சு அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டு கொள்ளணும். படம் எப்படியும் ஊத்திக்கிட்டு போக போகுது.


Ramesh Sargam
மே 30, 2025 12:36

நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல, இந்த கமல் ஒரு மொழியை பற்றி ஏதோ பேசப்போய் வம்பில் மாட்டிக் கொண்டிருக்கிறார். இது விதியா, கர்மாவா அல்லது வாய்க்கொழுப்பா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை