உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டு திருட்டை தடுப்போம்: ராகுல்

ஓட்டு திருட்டை தடுப்போம்: ராகுல்

பீஹாரில் நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது:

லோக்சபா தேர்தலை தொடர்ந்து, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடந்தது. மஹாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற இண்டி கூட்டணி, அடுத்து நடந்த சட்டசபை தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு நாங்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை. மாறாக, வாக்காளர் பட்டியல் தரவுகளை ஆராய்ந்தோம்-. ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதை அறிந்தோம். வாக்காளர்கள் அதிகம் சேர்க்கப்பட்ட பகுதிகளில் பா.ஜ., வென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. தேர்தல் கமிஷனிடம் வாக்காளர் பட்டியலை கேட்டால், அமைதியாக இருக்கிறது. மஹாராஷ்டிராவில் நடந்தது போல், பீஹாரிலும் ஓட்டுத் திருட்டுக்கு பா.ஜ., முயற்சிக்கிறது. ஆனால், பீஹார் மக்கள் இதை நடத்தவிடமாட்டார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி என்பது, ஓட்டுகளை திருடும் முயற்சி. அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய தேர்தல் கமிஷன், பா.ஜ.,வின் அறிவுறுத்தல்படி செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

saravan
ஜூலை 10, 2025 17:15

உங்களுக்கு ஓட்டுப்போட பங்களாதேஜ் காரண இந்தியாவிற்குள் விட்டுரலாமா


Anbuselvan
ஜூலை 10, 2025 16:58

பாத்து வார்த்தையை விடுங்க சார். அப்புறம் உங்க தோழமை கட்சிக்காரங்க உங்களை விட்டு பிரிந்து விட போகிறார்கள்.


R.P.Anand
ஜூலை 10, 2025 16:38

அய்யா கேரளாவில் ஜெயித்த போது இருக்க வாய்ப்பேஇல்லையே


Muralidharan S
ஜூலை 10, 2025 13:08

அந்நிய தேச குடியுரிமை உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்ற தேர்தல் கமிஷன் ஆரம்பித்து இருக்கிறது.. நல்ல விஷயம்.. இதை கண்டு அலறுகிறார் என்றால், தேள்கொட்டுகிறது என்று அர்த்தம். இத்தாலி கான்-கிராஸ் குடும்பத்திற்கு வேறு நாட்டு குடியுரிமை இருக்கிறதா என்பதை முதலில் சிறப்பு புலனாய்வு செய்து கண்டுபிடித்து, இரட்டை குடியுரிமை இருந்தால், எப்படி கிடைத்தது என்பதை தீர விசாரித்து, எல்லோரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இவர்களால் நமது நாட்டிற்கு ஆபத்து. டில்லியில் ஆரம்பித்து தொடர்ந்து தமிழகத்திலும், கேரளாவிலும், தெலுங்கானாவில் மற்றும் கர்நாடகாவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் கள்ளத்தனமாக இரட்டை குடியுரிமைகளுடன் இங்கே இருப்பவர்களை எல்லாம் டிரம்ப் செய்வது போல சங்கிலி போட்டு கட்டி சரக்கு விமானத்தில் மூட்டை கட்டி எடுத்து சென்று அவரவர் நாடுகளில் போட்டுவிட்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


Anand
ஜூலை 10, 2025 11:24

அதாவது இவருக்கு இவரே தடுத்துக்கொள்வார்....


selvelraj
ஜூலை 10, 2025 10:58

ஐயா ராசா நீ நல்லா இருக்கணும்பா அப்பத்தான் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை குழி தோண்டி புதைத்து விடுவீர்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 10, 2025 08:49

இனிமேல் ஒட்டு திருட்டை நிறுத்திவிட்டு 2009 சிவகங்கை போல தேர்தல் முடிவை திருடலாம்


raja
ஜூலை 10, 2025 08:34

நீங்க இப்படி சொல்றீங்க ஆனால் மக்கள் உலக புகழ் 2ஜி ஊழல்வாதிகள் கூட்டம் ஆன காங்கிரஸ் திருட்டு திமுகாவை ஒழிப்போம் என்று சொல்கிறார்களே


Subburamu Krishnasamy
ஜூலை 10, 2025 07:48

Raul is not confidence in any democratic institutions and constitutional bodies. Aged immature political neta in the country. There is no need to destroy INC by other parties, he himself doing perfect job to do final rites of Italian barmaid family party


Nenukopal,S
ஜூலை 10, 2025 07:48

பப்பு. இருக்கிற இடமெல்லாம் வக்பு வாரியதுக்குதான் சொந்தம் அப்டின்னு சட்டம் போட்டது, காஷ்மீர் பண்டிட் படுகொலை, சீக்கியர்கள் படுகொலை, இலங்கை தமிழர் படுகொலை...எடுப்பது ஓட்டு பிச்சை. இதுல வாய் உதார். நீங்கள் எல்லாம் திருத்தவே முடியாது...நாங்க உங்களை எங்கே வைக்கணுமோ அங்கே வைய்ப்போம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை