உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அரசை அகற்றுவோம்: காங்., ராகுல் பேச்சு

பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அரசை அகற்றுவோம்: காங்., ராகுல் பேச்சு

புதுடில்லி: உண்மை மற்றும் அகிம்சை வழியில் செயல்பட்டு, மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அரசை அகற்றுவோம், என காங்கிரஸ் எம்.பி.,யும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குறிப்பிட்டார். டில்லி ராம்லீலா மைதானத்தில், காங்., சார்பில் 'ஓட்டுத் திருடர்களே பதவியை விட்டு விலகுங்கள்' என்ற பேரணி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று ராகுல் பேசுகையில், ''மத்தியில் ஆளும் மோடி - ஆர்.எஸ்.எஸ்., அரசிடம் அதிகாரம் இருப்பதால், அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. வாக்காளர் பட்டியலில் மோசடி போன்றவை நடக்கின்றன. உண்மை மற்றும் சத்தியத்தின் பக்கம் நின்று, அவர்களை அதிகாரத்தில் இருந்து அகற்றுவோம்,'' என்றார். இதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்கா பேசுகையில், ''மக்களின் ஓட்டுரிமையை பறிக்க எப்படி அனுமதி அளித்தது என்பது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது, பா.ஜ.,வால் அவரைக் காப்பாற்ற முடியாது,'' என்றார். முன்னதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ''வாக்காளர் பட்டியல் மோசடியில் ஈடுபடுபவர்கள் துரோகிகள் மற்றும் நாடகக்காரர்கள், அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

srinivasan
டிச 15, 2025 19:02

முதல்ல இருக்கறத காப்பாத்த பாரு. காங்கிரஸ் கட்சியே அழியுது. இதுல இவரு பிஜேபியை அழிக்க போறாராம்


Madras Madra
டிச 15, 2025 16:08

இன்னுமா இவங்க நம்புறாங்க


A.Kennedy
டிச 15, 2025 13:53

உங்களை நாட்டை விட்டு அனுப்ப நாங்க தயாராயிட்டோம், தொடர் தோல்விகளிலிருந்தே உங்களுக்கு தெரியவில்லையா? இனிமேயா உங்க கட்சி ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருக்கு உங்களுக்கு, நீங்க இத்தாலிக்கே போயிடுங்க அதுதான் உங்களுக்கும், உங்க கட்சிக்கும் நல்லது, எங்க நாட்டுக்கும் நல்லது. உங்க தாயையும் கூட்டிக்கிட்டு போயிட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷம்.


kjpkh
டிச 15, 2025 13:15

ஓட்டு திருட்டுக்கு ஆதாரம் இருக்கிறது என்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது தானே. கேரளாவில் ஓட்டு திருட்டு மூலம்தான் ஜெயித்தீர்களா..


Muralidharan raghavan
டிச 15, 2025 14:11

correct


ram
டிச 15, 2025 12:29

காங்கிரஸ் கட்சியை இந்தியன் பாக்கிஸ்தான் முஸ்லீம் கட்சியாக மாத்திவிட்டார் இந்த இத்தாலி கோமகன்


Ramesh Sargam
டிச 15, 2025 12:14

உண்மை மற்றும் அகிம்சை ரெண்டு வழியுமே தெரியாதவர் பேசும் பேச்சை பாருங்கள்.


vbs manian
டிச 15, 2025 09:31

இந்த ஜென்மத்தில் நடக்காது சார். அவ்வளவு தூரம் மக்களிடமிருந்து விலகி போய் விட்டீர்கள்.


பப்பு யாதவ்
டிச 15, 2025 09:00

தம்பி போய் வீட்டில் யாராச்சும் பெரியவர் இருந்தால் வரச் சொல்


Narasimhan
டிச 15, 2025 08:31

முதலில் உன் கட்சியிலிருந்து உன்னை தூக்காமல் பார்த்துக்கொள். அப்படி ஒரு ராசியான ஆள் நீ. உன்னால்தான் பாஜக வளர்கிறது.


VENKATASUBRAMANIAN
டிச 15, 2025 08:19

இப்படியே பேசுங்கள் அதுதான் பாஜகவிற்கு தேவை.


புதிய வீடியோ