உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முழு உண்மையை மக்களிடம் சொல்வோம்: அமித்ஷா உறுதி

முழு உண்மையை மக்களிடம் சொல்வோம்: அமித்ஷா உறுதி

புதுடில்லி : '' டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி, மக்களிடம் முழு உண்மையை சொல்வோம்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, மூத்த அதிகாரிகளுடனும், டில்லி போலீஸ் கமிஷனரிடமும் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து என்எஸ்ஜி, என்ஐஏ, தடயவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு செல்ல உத்தரவிட்டதுடன், இந்த தாக்குதல் தொடர்பாக உளவுத்துறையினருடன் தொடர்பில் உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=23ummeoo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பிரதமரிடம் விளக்கம்

இதனைத் தொடர்ந்து அவரை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு டில்லியில் நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.

விசாரணை

டில்லியின் செங்கோட்டையில் சுபாஷ்மார்க் போக்குவரத்து சிக்னல் அருகே நவ.,10 மாலை 7 மணியளவில் ஹூண்டாய் ஐ 20 காரில் குண்டுவெடித்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த10 நிமிடத்தில் டில்லி குற்றப்பிரிவு போலீசார், ஸ்பெஷன் கிரைம்பிராஞ்ச் போலீசார் விரைந்தனர். தற்போது என்எஸ்ஜி, என்ஐஏ குழுவினருடன் ததடயவியல் துறை நிபுணர்களும் இணைந்து விசாரணையை துவக்கியுள்ளனர். அனைத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லி போலீஸ் கமிஷனர் மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகளுடனும் பேசி இருக்கிறேன். அனைத்து வழிகளையும் ஆராய்வதுடன், அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்வோம். அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து முழு உண்மைகளையும் மக்களிடம் சொல்வோம். சம்பவ இடத்திற்கு செல்வதுடன், மருத்துவமனைக்கும் செல்ல உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஆறுதல்

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mario
நவ 11, 2025 08:12

திரைக்கதை எழுதி முடித்த உடன்


Gobi
நவ 11, 2025 07:32

தீமுக அழிக்கப்பட வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 11, 2025 06:22

மீண்டும் மீண்டும் இந்த சாணக்கியரின் உள்துறை பல்பு வாங்குது ........


Palanisamy T
நவ 11, 2025 02:47

1. எந்த உண்மையை சொல்லப் போகின்றார்கள். இந்த குண்டு வெடிப்பு தமிழகத்தில் நடந்திருந்தால் மக்களுக்கு பாதுகாப்பில்லை. ஆட்சியாளர்கள் பொறுப்பேற்று பதவி விலகவேண்டுமென்று இந்நேரம் ஒப்பாரி வைத்திருப்பார்கள். பாஜக வின் கவனம் அனைத்தும் இப்போது தமிழக ஆட்சியை அகற்றவேண்டும் என்பதில் முழுக்கவனம். அவர்களுக்கு டில்லியை மற்ற மாநிலங்களின் பாதுகாப்பை கவனிக்க நேரம் எது? மொத்தத்தில் இதற்க்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவி விலகியிருக்க வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 11, 2025 07:18

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போன அவலத்திற்கு இரும்புக்கர முதல்வர் பதவி விலகுவாரா >>>>


Gobi
நவ 11, 2025 07:33

200ரூபா மாடல் நீ


புதிய வீடியோ