உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலநிலை மாற்றத்தால் தாக்கும் நோய்கள் முன்கூட்டியே கண்டறிய நல்வாழ்வு மையம்

காலநிலை மாற்றத்தால் தாக்கும் நோய்கள் முன்கூட்டியே கண்டறிய நல்வாழ்வு மையம்

சென்னை: காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்கால நோய்களின் தீவிரத்தை, ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க, ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள அரசாணை:காலநிலை மாற்றத்தின் காரணமாக, மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல், சுகாதாரம் ஆகியவற்றுடன் பின்னிப்பிணைந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் முயற்சியாக, மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் அமைக்கப்பட்டுள்ளது.விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள், நோய் கடத்திகள் வாயிலாக பரவும் நோய்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு திறன், பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்படும் இழப்பு ஆகியவற்றை தடுப்பது அவசியம்.அதற்கு, காலநிலை மாற்றம் போன்றவற்றில் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு, பொது சுகாதாரம், கால்நடை மருத்துவம், சுற்றுச்சூழல் அறிவியலின் கூட்டு முயற்சிகள் தேவை.எனவே, ஒருங்கிணைந்த நல்வாழ்வு மையம் மற்றும் காலநிலை மாற்றத்தால் உருவாகும் உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கான கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும்.கண்காணிப்பு, ஆராய்ச்சியை வலுப்பெற செய்வதுடன், துறைகளுக்கு இடையோன இணக்கத்தையும் அதிகரித்து, புதுமையான தீர்வுகளை கண்டறிவது முக்கியம்.காலநிலை மாற்றத்தின் அடிப்படையில், எதிர்காலங்களில் ஏற்படும் நோய்களின் தீவிர தன்மையை மதிப்பிடுவதற்கு, ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கான மாதிரிகள் உருவாக்கப்படும்.நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்களை கொண்ட ஒரு செயலகத்தின் உதவியுடன் செயல்படுவதாக, இது அமையும். காலநிலை துாண்டலால் ஏற்படும் உடல் நல சவால்களை எதிர்கொள்ள, வலிமையான முற்போக்கு அணுகுமுறையாக அமைவதுடன், இந்தியாவின் முன்னோடி செயல் திட்டமாகவும் இது இருக்கும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை