உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டாவில் குண்டு வெடிப்பு: குப்பை சேகரித்தவர் காயம்: என்.ஐ.ஏ.,விசாரணை

கோல்கட்டாவில் குண்டு வெடிப்பு: குப்பை சேகரித்தவர் காயம்: என்.ஐ.ஏ.,விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் நடந்தகுண்டுவெடிப்பு சம்பவத்தில் குப்பை சேகரித்த நபர் காயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேற்குவங்க மாநிலம் மத்திய கோல்கட்டா நகரின் புலோச்சமான் நகரில் உள்ள எஸ்.என். பானர்ஜி சாலையில் குப்பை மேடு உள்ளது.அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் அங்கு குப்பை சேகரித்துக்கொண்டிருந்த 54 வயது நபர் காயமடைந்தார்.தகவலறிந்து வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சம்பவ இடத்திற்கு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய பாதுகாப்பு போலீஸ் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னதாக கோல்கட்டாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான சம்பவத்திற்கு நீதி கேட்டு டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rpalnivelu
செப் 15, 2024 05:56

பிரிவினைவாதம்/ஊழல் செய்பவர்களை கண்டு கொள்ளாத நீதிமன்றங்களை முதலில் சரி செய்ங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2024 22:12

இதன்மூலம்தான் - தனக்கு - தீர்வு கிடைக்கும் என்று முமைதா பேகம் நம்புகிறார் ..... எப்படி? ....கொல்கத்தா டாக்டர்கள் போராட்டத்தை முடிக்க போராடும் மம்தா ..... இரவில் தூங்கவில்லை போராட்டம் நடத்தும் டாக்டர்களை சந்தித்து மம்தா உருக்கம் ..... இவற்றை இணைத்துப் பார்த்தால் எப்படி என்று புரியும் ..... தமிழ்த்தேச மன்னரும் இதிலிருந்து கற்க வேண்டியதைக் கற்பார் .....


சமூக நல விரும்பி
செப் 14, 2024 21:22

மம்தாவுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்காதது பெரிய ஏமாற்றம். அதனால் மம்தா மறைமுகமாக மீண்டும் கலவரத்தை ஆரம்பிக்கிறார்.


sridhar
செப் 14, 2024 19:11

தமிழகம் மாதிரியே மே.வங்கத்திலும் 'அவங்க' என்ன வேணும்னா செய்யலாம் என்ற நிலை இருக்கிறது . மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தவறு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை