மேலும் செய்திகள்
உயர்படிப்பு தொடர சிக்கலா? மாணவரிடம் குறைகேட்பு
18-Jun-2025
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை முதன்முறையாக, 'செமஸ்டர்' முறையில் நடத்த திட்டமிட்டுள்ள மாநில அரசு, அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை செமஸ்டர் முறையில் நடத்துவது தொடர்பான அறிவிப்பை மாநில உயர் கல்வித் துறை ஏப்ரலில் வெளியிட்டது.முதல் இரண்டு செமஸ்டர்கள் பிளஸ் 1 மாணவர்களுக்கும், அடுத்த இரண்டு செமஸ்டர்கள் பிளஸ் 2 மாணவர்களுக்கும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான மூன்றாவது செமஸ்டர் தேர்வுகள் வரும் செப்., 8 - 22 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:பிளஸ் 2 மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை, செப்டம்பரில் முதன்முறையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்., 8 - 22 வரை நடக்கும் இந்த தேர்வை, பிளஸ் 1ல் தேர்ச்சி அடைந்தோர் மட்டுமே எழுதலாம். ஓ.எம்.ஆர்., எனப்படும் கணினி முறையில் தேர்வு நடத்தப்படும்.மொத்தம், 1:15 மணிநேரம் நடக்கும் தேர்வின் போது, மாணவர்கள், தண்ணீர் குடிக்கக் கூட வெளியே செல்ல அனுமதியில்லை. நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளைப் போல், இந்த தேர்விற்கு பல்வேறு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டிருக்கும்.அருகருகே அமர்ந்து இருக்கும் மாணவர்களுக்கு வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்காவது செமஸ்டர் தேர்வுகள், அடுத்தாண்டு பிப்., 12 - 27 வரை நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
18-Jun-2025