உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கம் பெயர் ஆங்கிலத்தில் மாறுகிறது; டிச.9ல் தாக்கல் சட்டசபை தீர்மானம்

மேற்கு வங்கம் பெயர் ஆங்கிலத்தில் மாறுகிறது; டிச.9ல் தாக்கல் சட்டசபை தீர்மானம்

மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை ஆங்கிலத்திலும் பஷ்ச்சிம் பங்கா (Paschim Banga) என்று மாற்றும் முன்மொழிவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.டிசம்பர் 6ம் தேதி தொடங்கும் சட்டசபைக் கூட்டத்தொடரில் இந்த முன் மொழிவு தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் சுவேந்து அதிகாரி கூறி உள்ளார். நிருபர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறி இருப்பதாவது;அமைச்சரவை இன்று அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆங்கிலத்திலும் மேற்கு வங்கம் பஷ்ச்சிம் பங்கா என்றே அழைக்கப்படும். பஷ்ச்சிம் பங்கா என்பதை அப்படியே எழுத வேண்டும். நாங்கள் டிச.9ம் தேதி சட்டசபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறோம். பின்னர் மத்திய அரசுக்கும், பார்லிமெண்டுக்கும் அனுப்பி வைக்கப்படும். இது ஒரு வரலாற்று விஷயம். இவ்வாறு சுவேந்து அதிகாரி கூறினார்.1999, 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற பல்வேறு முன்மொழிவுகள் வைக்கப்பட்டாலும் அதை இறுதி ஒப்புதல் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை